Skip to main content

Posts

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Recent posts

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

புதுடெல்லி: கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும் பணியை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது தாத்ரியின் படுகொலை சம்பவம். மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி முகமது அக்லாக், கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி வெளியான பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிஹாரில் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைய உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாள்வியா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு 

பாட்னா: உலக வங்​கி​யிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலை​மையி​லான அரசு தேர்​தல் வெற்​றிக்​காக பயன்​படுத்தி உள்​ள​தாக ஜன் சுராஜ் கட்சி குற்​றம்​சாட்டி உள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. மொத்​தம் உள்ள 243 இடங்​களில் என்​டிஏ 202, மெகா கூட்​டணி 35 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி படு​தோல்வி அடைந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்