தருமபுரி மாவட்ட மானாவாரி நில பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து காலி மதுபாட்டில்கள் தான் காப்பாற்றுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தின் 7 வட்டங் களிலும் கணிசமான அளவில் வனப்பகுதி உள்ளது. வனத்தை ஒட்டி விளைநிலங்களும் உள்ளன. மாவட்டம் முழுக்க உள்ள வனத்தில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்கின்றன. வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் நிலக்கடலை, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, பாசிப்பயிறு, உளுந்து, மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் அறுவடை செய்து முடிக்கும் வரை வயலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தவறினால், விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள், குறிப்பாக இரவு நேரங்களில் நுழைந்து பயிர்களை பெருமளவில் சேதப்படுத்து கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்