Skip to main content

Posts

Showing posts from April, 2022

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

புதுடெல்லி: ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே நேற்று ஓய்வு பெற்றார். இதை யடுத்து 29-வது ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் இன்ஜினீயர்ஸ் படை் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படுவதை ஊக்கவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். 2019-ல் கேரள ஜனபக்சம்என்ற கட்சியை தொடங்கி, கடந்தமக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 7 முறைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கேரளாவின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பொருளாதாரம் பாதிப்பு: இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் - இந்திய ரிசர்வ் வங்கி குழு அறிக்கை

மும்பை: கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றுரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கை குறித்து பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் மற்றும் பணம் மற்றும் நிதி நிலைகுறித்த அறிக்கையை (2021-22)ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. ஆனால் 2021-22 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் 2-வது அலையால்பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. அதேபோல 3-வது அலை ஜன.2022-ல் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொதுப் பிரிவிலும் ஓபிசிக்கு முன்னுரிமை தரவேண்டும்: கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளவர்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுப் பிரி விலும், முன்னுரிமை தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் சார்பில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்ஸ் (டிடிடி) என்றகாலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட் டது. தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33 சதவீதமாகவும் நிர்ண யிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு: பாஜக பெண் நிர்வாகி திவ்யா கைது

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த அக்டோ‍பரில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 54 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில்முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் க‌டந்த வாரம் தேர்வில் 2-ம் இடம் பிடித்த சேத்தன், 7-ம் இடம் பிடித்த வீரேஷ், 9-ம் இடம் பிடித்த பிரவீன்குமார் உட்பட 12 பேர், 10 போலீஸார் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள பாஜக பிரமுகர் திவ்யாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார் திவ்யா, அவரது கணவர் ராஜேஷ் ஆகியோரை தேடி வந்தனர். இதனிடையே காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, பாஜக அரசு திவ்யாவை காப்பாற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் புனேவில் தலைமறைவாக இருந்த திவ்யா, ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவ...

வாட்டி வதைக்கும் வெப்பம், அடுத்த 5 நாட்களுக்கு குறைய வாய்ப்பில்லை: இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், மறுபுறம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் வெப்ப நிலை 45 டிகிரியை கடந்ததால் கடும் அனல் காற்று வீசியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செமி கண்டக்டர் தொழிலை அரசு ஊக்குவிக்கும்: பெங்களூருவில் ‘செமிகான்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: செமி கண்டக்டர் தொழிலை ஊக்குவிக்கும் அரசாக இந்த அரசு திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் ``செமிகான் - 2022’’ மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "முந்தைய அரசானது மூடிய கதவாக செயல்பட்டது. ஆனால் இந்த அரசு தொழில்துறைக்கான கதவை திறந்துள்ளது. தொழில் துறையினர் தங்களது துறையை முன்னேற்ற கடுமையாக பாடு படும்போது, அதை ஊக்குவிக்க இந்த அரசு அதைவிட கடுமையாக பாடுபடும். அரசுடன் பேச்சு வார்த்தையை தொழில்துறையினர் எப்போதும் நடத்தலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைந்து கொண்டு செல்ல 42 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வண்டிகள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் 70 சதவீதம் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு விரைவாக தீர்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி குறைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டியாலா வன்முறை: காலை வரை  ஊரடங்கு அமல் - நடந்தது என்ன?

பட்டியாலா (பஞ்சாப்): பட்டியாலாவில் நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு பேரணியின் போது இரு பிரிவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நகரில் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஹரிஷ் சிங்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு அணிவகுப்பின் போது இரண்டு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பட்டியாலா நகரத்தில் உள்ள காளி கோயிலுக்கு வெளியே இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதல் காரணமாக நகரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அதிக எரிபொருள் விலை, நிலக்கரி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எதுவாக இருந்தாலும் மாநில அரசுகளே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. எரிபொருள் மீதான மொத்த வரியில் 68 சதவீதம் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. என்றாலும் பிரதமர் மோடி தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். பிரதமர் மோடியின் கூட்டாட்சி முறை என்பது அனைவரையும் ஒத்துழைக்க வைப்பதல்ல, வற்புறுத்திப் பெறுவது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த நவம்பரில் குறைத்தபோது, வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியது” என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். from இந்து ...

ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு - பிரதமர் மோடி மே 2 முதல் சுற்றுப்பயணம்

புதுடெல்லி: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ்ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குமே 2-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார். மே 2-ம் தேதி ஜெர்மனி செல்கிறார். பெர்லின் நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான், உ.பி., டெல்லி, ஹரியாணா, ஒடிசாவில் 5 நாட்கள் அனல் காற்று வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: "ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும். தற்போது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. டெல்லியில் இன்று (வெள் ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும்" இவ்வாறு அவர் கூற...

இந்தியாவில் ஒரே நாளில் 3,303 பேருக்கு தொற்று: கரோனா வைரஸ் 4-வது அலை அச்சம்

புதுடெல்லி: நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக 3,303 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 39 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4-வது அலை பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,23,693 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய தினத்தைவிட 701 அதிகரித்து 16,980 ஆக உள்ளது. இது மொத்த நோயாளிகளில் 0.04 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,563 பேர் குண மடைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எனது இறுதி ஆண்டுகளை நான் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறேன் - ரத்தன் டாடா

புதுடெல்லி: அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் டாடா அறக்கட்டளைகள் சார்பில் கட்டப்பட்டிருக்கும புற்றுநோய் மருத்துவமனைகளைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார். அஸ்ஸாம் மாநிலத்தில், மாநில அரசு ரத்தன் டாடா அறக்கட்டளைகள் சார்பில் 17 புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவைகளில் கட்டி முடிக்கப்பட்ட ஏழு அதிநவீன புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பிரதமருடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது," எனது இறுதி ஆண்டுகளை நான் ஆரோக்கித்திற்காக அற்பணிக்கிறேன். அஸ்ஸாம் அரசாங்கம், அஸ்ஸாமை அனைவரும் மதிக்கும் மாநிலமாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஹாராஷ்டிரா | சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வராததால் உறவுக்காரரை மணந்த பெண்

புல்தானா(மஹாராஷ்டிரா): திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், அதே முகூர்த்தத்தில், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்கார பையனுக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர். இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்த நிலையில், மணமகன் அவரது நண்பர்களுடன் குடித்து விட்டு தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 மாநிலங்களில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: அடுத்த மூன்று நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை: இந்தியா முழுவதும் வழக்கத்தை விட கோடை வெப்பம் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விதர்பா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கும், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், கங்கை நதி, மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவின் உள்பகுதி போன்றவைகளில் ஏப்ரல் 30 வரையிலும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய பகுதிகளில் மே 1ம் தேதி வரையிலும், பிகாரில் ஏப்.29ம் தேதி வரையிலும், சத்தீஸ்கர் பகுதிகளில் 30ம் தேதி வரையில் வெப்ப அலை நீடிக்கும். தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தொடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியை அடுத்து விசாகப்பட்டினத்திலும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அத்துமீறல்

விசாகப்பட்டினம் : திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி உயிரிழந்த ஜோஷ்வா (10) எனும் சிறுவனின் சடலத்தை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அங்குள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ரூ.10,000 கேட்டனர். அங்கு வந்த இலவச ஆம்புலன்சையும் அவர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் ஜோஷ்வாவின் சடலத்தை தோளில் சுமந்தபடி 90 கி.மீ தூரம் வரை அவரது தந்தை நேற்றுமுன்தினம் கொண்டு சென்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விசாகப்பட்டினம் கேஜிஎச் அரசு மருத்துவமனையில் மனோஜ் என்பவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அவர்களை தனது சொந்த காரில், மனோஜ் அழைத்து சென்றார். அப்போது, தனியார் ஆம்புலன்ஸ் கும்பல், மனோஜ் காரை மறித்து தாக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஆளுநர் பதவியே தேவையில்லை’ - தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு

ஹைதராபாத் : ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: ஆளுநர் பதவியால் மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவ் பதவி இழந்தார். பின்னர் மீண்டும் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். அப்படிப்பட்ட என்.டி.ராமாராவுக்கே ஆளுநர் பதவி சினிமா காட்டி விட்டது. ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிராவில் மாநில முதல்வர் 12 எம்எல்சிக்களை ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனை மாநில ஆளுநர் கண்டுகொள்ளாமல் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாஜ்மகாலுக்கு வந்த அயோத்தி மடத்தின் துறவி: பிரம்மதண்டத்துடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை

புதுடெல்லி : ஆக்ராவின் தாஜ்மகாலுக்கு அயோத்தி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது சீடர்களுடன் வந்திருந்தார். பிரம்மதண்டத்துடன் உள்ளே செல்ல மத்திய பாதுகாப்பு போலீஸார் அனுமதி மறுத்தது சர்ச்சையாகிவிட்டது. முகலாய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது தாஜ்மகால். உலகின் ஏழாவது அதிசயமான தாஜ்மகாலை பல்வேறு தரப்பினர் பல காரணங்களுக்காகக் காண விரும்புவது உண்டு. இந்தவகையில் அயோத்தி ராம் ஜானகி மடத்தின் தலைவரான துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் நேற்று முன்தினம் மாலை ஆக்ரா வந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா முதல் அலையில் ரூ.11,000 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு

புதுடெல்லி : கரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளருக்காக மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி நிதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020-21-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாராயண குருவின் போதனைகளை பின்பற்றினால் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியாது: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி : நாராயண குருவின் போதனைகளை பின்பற்றினால் உலகின் எந்த சக்தியாலும் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஆன்மிக தலைவர் நாராயண குரு கடந்த 1856-ம் ஆண்டு முதல் 1928-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். சாதி பாகுபாட்டுக்கு எதிராக தீவிரமாக போராடிய அவர் கடந்த 1903-ம்ஆண்டில் தர்ம சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். பின்னர் கேரளாவின் வற்கலை ஊரில் சிவகிரி மலை மீது மடத்தை ஏற்படுத்தினார். நாராயண குருவின் வழிகாட்டுதலின்படி பிரம்ம வித்யாலயா தொடங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களை ஊக்குவிக்கும் கதைகள் - குறு வீடியோ தொடரை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர்

புதுடெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'சுதந்திரம் தொடர்பான அமிர்தப் பெருவிழாக் கதைகள்' (ஆசாதி கி அம்ரித் கஹானியான்) என்ற குறு வீடியோ தொடர் ஒன்றை மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பெண் விடுதலையே ஒரு சமூகத்தின் விடுதலை என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ''விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்கான எண்ணங்கள் பெண் விடுதலையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. சமூகத்தில் ஒரே மாதிரியான மற்றும் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டிய பெண்களுக்கு ஆசாதி அல்லது சுதந்திரம் என்ற சொல் ஒரு பரந்த பொருளைக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத குடியிருப்புகளால் நகர்ப்புறங்களுக்கு அச்சுறுத்தல் - உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி : சமூக ஆர்வலர் ஜுவ்வாதி சாகர் ராவ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், “தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ரியல் எஸ்டேட் துறையினர் சட்டவிரோதமாக நிறுவிய குடியிருப்புகளால் மழைக்காலங்ளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுடன், முறையற்ற வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இதைப் பொருட்படுத்தாத அதிகாரிகள், சட்டவிரோத குடியிருப்புகளை முறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது. இதுகுறித்து முறையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வர மருமகன் கோரிக்கை

புதுடெல்லி : நேதாஜியின் மருமகன் சந்திரகுமார் போஸ் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம்தேதி விமான விபத்தில் காலமானார். அவரது அஸ்தி ஜப்பானில் உள்ள ரங்கோஜி கோயிலில் உள்ளது. அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும். வெற்றி பெற்ற ராணுவத்தின் தலைவராக சுதந்திர இந்தியாவுக்கு திரும்ப நேதாஜி விரும்பினார். ஜப்பானில் உள்ள அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வந்து, நேதாஜியின் மகள் அனிதா போஸ் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் 250 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற 9 பாகிஸ்தானியர் கைது

அகமதாபாத் : குஜராத்தில் இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ஹஜ் என்ற படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. அரபிக் கடலில் நுழைந்த அந்த படகை கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தான் படகில் 250 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் படகில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 9 பாகிஸ்தானியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்திவர முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.280 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் இதேபோல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் கன்டெய்னர் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tam...

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஜூலையில் தொடங்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1-ல் அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வார விடுமுறை கிடைக்க வாய்ப்பு

புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங் கள் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரித்து, அதை ஈடுகட்டும் வகையில், கூடுதல் வார விடு முறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான விதிகளை வகுக்கவில்லை. இந்த புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்