Skip to main content

Posts

Showing posts from June, 2024

அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுங்கள்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷனில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் கனமழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லியில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 1936-ம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. 88 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதால் டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தெற்கு டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி

புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27-ம் தேதி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை

புதுடெல்லி: நாடு முழுவதும் ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் மேலும் 3 கோடிவீடுகள் கட்டித் தரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மலேசியா, ரியாத்தில் இருருந்து சென்னைக்கு நேரடி விமானங்கள்: மத்திய அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி மனு

புதுடெல்லி: மலேசியாவின் பினாங் மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து ஐயுஎம்எல் எம்பியான நவாஸ்கனி மனு அளித்தார். இது குறித்து இன்று டெல்லியில் அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் ராமநாதபுரம் எம்பியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “அதிகமாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களையும், வெளிநாடுகளில் வணிகம் செய்பவர்களையும் கொண்ட மாவட்டம் ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு நெடுங்காலமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எனது இந்த தொகுதியில் பிரசித்திப் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் இறுதி பணி 2025 மார்ச்சில் முடியும்: நிருபேந்திர மிஸ்ரா தகவல்

அயோத்தி: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மூலவரான குழந்தை ராமரின் சிலை கருவறையில் கடந்தஜனவரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பான பிராணபிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது: கோயிலின் முதல் தள கட்டுமானப் பணி அடுத்த மாதம் நிறைவுபெறும். இதையடுத்து இரண்டாவது தளத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இந்தஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். கோயில் வளாகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு நிருபேந்திர மிஸ்ரா கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-வது முறையாக மக்களவை தலைவரானார் ஓம் பிர்லா: குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அணி வெற்றி

புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடுத்தர-தூர நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை கடற்படையிடம் ஒப்படைத்தது டிஆர்டிஓ

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதுடெல்லியில் இன்று (ஜூன் 26) நடைபெற்ற விழாவில் நடுத்தர தூர-நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது. ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்பு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட நுண்ணலை மறைப்பு ராக்கெட், ரேடார் சிக்னல்களை மறைத்து, தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி நுண்ணலை கவசத்தை உருவாக்குகிறது. இது ரேடார் கண்டறிதலைக் குறைக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன்

பெங்களூரு: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடந்த 2023 செப்டம்பரில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், “டெங்கு, மலேரியா, கரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறையில் கேஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை: மத்திய அரசின் சதி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், தற்போது சிபிஐ-யும் அவரை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது திகார் சிறையில் இருக்கும் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: முதல் நாளில் 280 எம்.பி.க்கள் பதவியேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜனநாயகத்துக்கு கரும்புள்ளியாக அமைந்த அவசரநிலை மீண்டும் நிகழக் கூடாது என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. 3-வது முறை பிரதமராக நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீர் தள்ளிவைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,முதுநிலை டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வு நேற்று (ஜூன் 23) காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்க இருந்தது. தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படித்து முடித்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தொலைவில் உள்ளவர்கள் முந்தைய நாளான 22-ம் தேதி இரவே தங்கள் ஊர்களில் இருந்து புறப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெட் தேர்வு முறைகேடு: பிஹாரில் விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்; 4 பேர் கைது

பாட்னா : பிஹார் மாநிலத்தில் நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான 4 பேரை போலீஸார் கைது செய்தனர். யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் மறுதேர்வு: 1,563 மாணவர்களில் 750 பேர் ஆப்சென்ட்!

புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 750 பேர் கலந்து கொள்ளவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

புதுடெல்லி: அயோத்தி ஹனுமன் கோயில் மடத்தலைவர் ராஜு தாஸின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இங்கு பாஜக தோல்வியால் தொடரும் சர்ச்சை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடந்து மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு உத்தரப்பிரதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அயோத்தியில் அக்கட்சி அடைந்த தோல்வி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி: நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுதல், வினாத்தாளை கசியவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை மத்தியஅரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் அண்மையில் நடைபெற்ற நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட், நெட் முறைகேடு விவகாரம்: தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம்

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஜிசி நெட் தேர்வு நடப்பதற்கு முன் வினாத்தாள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை

புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள் இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை அடல் சேது பாலத்தில் விரிசலா? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கம்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கமளித்துள்ளது. மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு அடல் சேது என்ற பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. 2018ஆம் தொடங்கிய இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஜிசி நெட் தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி: இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்வதற்கும் இளநிலை ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாகநடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெடிகுண்டு மிரட்டல் விடுப்போருக்கு விமானத்தில் பயணம் செய்ய 5 ஆண்டுகள் தடை?

புதுடெல்லி: விமான பாதுகாப்பு துறை தலைமை இயக்குநர் ஜுல்பிகர் ஹாஸன் நேற்று கூறியதாவது: விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் சம்பவங்கள்அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தாலும் இதுவரை 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் ரூ.1,749 கோடி செலவில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராஜ்கிர்: பிஹார் மாநிலத்தில் ரூ.1,749 கோடிசெலவில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் தற்காலிக இடத்தில் 14 மாணவர்களுடன் செயல்படதொடங்கியது. பழங்காலத்தில் இதே நகரில் அமைந்திருந்த உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுவடிவம்தான் இது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி: வாராணசியில் பிரதமர் மோடி வழங்கினார்

வாராணசி: 'பிஎம் கிசான் சம்மான் நிதி' திட்டத்தில் 17-வது தவணையாக 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி வாராணசியில் நேற்று வழங்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த 18-வதுமக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த9-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக மத்தியில் ஆட்சிஅமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுதானதால் பயங்கரம்: ரயில்கள் மோதி 9 பயணிகள் பரிதாப உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது, பின்னால் வந்த சரக்கு ரயில் பலத்த வேகத்தில் மோதியதில் பல பெட்டிகள் தடம்புரண்டன. இந்த பயங்கர விபத்தில் சரக்கு ரயிலின் லோகோ பைலட், அவரது உதவியாளர், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து அசாம் வழியாக மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை 9 மணி அளவில் மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கப்பானி ரயில் நிலையம் அருகே நின்றிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் சூரத் விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் ரூ.2 கோடி வைரம் பறிமுதல்

சூரத்: குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில், துபாய் செல்ல முயன்ற பயணி ஒருவரிடம் ரூ.2.19 கோடி மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள எஸ்எச்ஏ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துபாய் செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் ஏறுவதற்காக சஞ்சய்பாய் மொரோ தியா என்பவர் வந்தார். அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) காவலர் சோதனை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநில துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி மற்றும் உயர்அதிகாரிகளுடன் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். காஷ்மீரியின் ரியாசி மாவட்டத்தில் சிவ்கோரி கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தர்களை குறிவைத்துதீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதிதாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்டில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயம் அடைந்தனர். டெல்லியிருந்து ஒரு டெம்போ வேனில் சுற்றுலா பயணிகள் 26 பேர், உத்தராகண்ட்டுக்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு புறப்பட்டனர். அந்த வேன் உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபியாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில், நேற்று காலை சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. ராய்தொலி என்ற இடத்தில் அந்த வேன் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்து, அருகில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் நொறுங்கி கிடந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஆனார் பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 164 தொகுதிகளை கைப்பற்றி தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு அமைச்சர்கள் அனைவருக்கும் நேற்று துறைகளை ஒதுக்கினார். இதில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பொது நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு

வதோதரா: குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார். அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

15.06.2024 குரோதி 1 ஆனி சனிக்கிழமை திதி: நவமி நள்ளிரவு 2.33 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: உத்திரம் காலை 8.11வரை. பிறகு அஸ்தம். நாமயோகம்: வியாதிபாதம் இரவு 8.05 வரை. பிறகு வரீயான். நாமகரணம்: பாலவம் மதியம் 1.20 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36. ராகு காலம் காலை 9.0 0-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4 சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்களின் உடலை கொண்டுவர குவைத் விரைந்தது ராணுவ விமானம்

புதுடெல்லி/ குவைத் சிட்டி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் உடல்களை தாயகம்கொண்டுவர விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: புதிய உத்தரவு அமல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் அலோக் குமார் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜூன் 24-ல் தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24-ம்தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரில், மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 3-வது முறையாக மோடி கடந்த 9-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 36 இணைஅமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: பவன் கல்யாண் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்

விஜயவாடா: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உட்பட 23 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் இக்கூட்டணி 21 இடங்களை கைப்பற்றியது. இதுபோல, மொத்தம் உள்ள 175 பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குவைத் தீ விபத்து | உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

புதுடெல்லி: குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்