Skip to main content

Posts

Showing posts from October, 2025

ம.பி.யில் ஓய்வூதியத்துக்காக 50 ஆண்டாக போராடும் மூதாட்டி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த சங்கர்லால் ஸ்ரீவாஸ்தவா 23 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி 1971-ல் பணியிலிருந்து விலகி 1985-ல் காலமானார். அவருடைய மனைவி மிதிலேஷ் ஸ்ரீவாஸ்தவா (79), தனது கணவரின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை கேட்டு அளித்த மனுக்கள், ஆவணங்கள் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் காணாமல் போயின. இதையடுத்து அவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதற்கு நடுவே, அவருக்கு தற்காலிக ஓய்வூதியமாக மாதத்துக்கு வெறும் ரூ.33 வழங்கப்படுகிறது. பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு. 2005-ல் மிதலேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் காணாமல் போன ஆவணங்களை காரணம் காட்டி ஓய்வூதியம் தருவதை அரசு தாமதப்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 01.11.2025 விசுவாவசு 15 ஐப்பசி சனிக்கிழமை திதி: தசமி காலை 9.12 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: சதயம் மாலை 6.18 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: துருவம் பின்னிரவு 2.05 வரை. பிறகு வியாகாதம். நாமகரணம்: கரசை காலை 10.04 வரை. பிறகு வணிசை, நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் மாலை 6.18 மணி வரை. பிறகு மந்தயோகம் சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: ஆயில்யம் மாலை 6.20 வரை. பிறகு மகம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07. அஸ்தமனம்: மாலை 5.54. ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 5, 9 பரிகாரம் தயிர் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025

மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். ரிஷபம்: பழைய பிரச்சினை தொடரும். இருப்பினும் மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 31.10.2025 | ஐப்பசி 14 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 31.10.2025 விசுவாவசு 14 ஐப்பசி வெள்ளிக்கிழமை திதி: நவமி காலை 10.04 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: அவிட்டம் மாலை 6.49 வரை பிறகு சதயம். நாமயோகம்: கண்டம் காலை 6.11 வரை. பிறகு விருத்தி. நாமகரணம்: கௌலவம் காலை 10.04 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, 2 8-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: பூசம் மாலை 6.49 வரை. பிறகு ஆயில்யம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02. அஸ்தமனம்: மாலை 5.42. ராகு காலம் காலை 10.30-12.00 எமகண்டம் மதியம் 3.00-4.30 குளிகை காலை 7.30-9.00 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 5, 7 பரிகாரம் வெல்லம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது. உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்யா காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'பிஹாரிகள் மற்ற மாநிலங்களில் அவமதிக்கப்படும்போது காங்கிரஸ் கைதட்டுகிறது’ - சிராக் பாஸ்வான்

சாப்ரா: 'மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்' என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-ன் தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாப்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய சிராக் பாஸ்வான், “நான் அரசியலில் நுழைந்ததற்குக் காரணம், மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் அவமதிக்கப்படும் விதம்தான். பிஹாரி என்ற வார்த்தை கூட ஒரு அவமதிப்பாக மாற்றப்பட்டது. பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னிலையில், பிஹாரிகள் பஞ்சாபுக்குள் நுழைய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கைதட்டியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தெலங்கானாவிலும் பிஹாரிகளை காங்கிரஸ் இப்படித்தான் நடத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 அக்டோபர் 2025

மேஷம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். ரிஷபம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்​களிடம், நல்ல வேலை, நல்ல சம்​பளம் என்று கூறி இராக்​குக்கு ஏஜெண்ட் ஒரு​வர் அழைத்​துச் சென்​றார். இந்​நிலை​யில் பஞ்சாப் பெண் ஒரு​வரை அங்​குள்​ளவர்​கள் சித்​ர​வதை செய்​த​தாகத் தெரி​கிறது. அங்கு சென்ற பின்​னர் வீட்டு வேலை செய்​யு​மாறு அங்​குள்​ளவர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தாக​வும், வேலை செய்ய மறுத்​தால் வீட்​டின் உரிமை​யாளர் அடித்​து, உதைத்​தும் கொடுமை செய்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடுவானில் விமானத்தில் 3 பேரை கத்தியால் குத்திய இந்தியர் கைது

புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு லுப்தான்ஸா விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 28 வயதான இந்தியாவைச் சேர்ந்த பயணி பிரணீத் குமார் உசிரிபள்ளி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது 17 வயதான 2 இளைஞர்களை முள்கரண்டியால் (ஃபோர்க்) பிரணீத் குமார் குத்தியுள்ளார்.இதனால் விமானத்தில் உள்ளவர்கள் பீதியடைந்தனர். அப்போது இதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து விமானிகள், அந்த விமானத்தை பாஸ்டன் விமான நிலையத்துக்குத் திருப்பினர். அங்கு பிரணீத் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் மாணவர் விசா மூலம் பட்டமேற்படிப்பு படித்தவர். பிரணீத் குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 அக்டோபர் 2025

மேஷம்: வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். ரிஷபம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சுபகாரியம் இப்போது கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது மோந்தா புயல்: 2 பெண்கள் உயிரிழப்பு

காக்கிநாடா: ‘மோந்தா’ புயல் ஆந்திராவில் நேற்று இரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோன சீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை மோந்தா புயல் ஏற்படுத்தி உள்ளது. புயலுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.1,204-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டது. இப்புயல் நேற்று மதியம் காக்கிநாடாவுக்கு 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. 15 கி....

ஜோதிட நாள்காட்டி 28.10.2025 | ஐப்பசி 11 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 28.10.2025 விசுவாவசு 11 ஐப்பசி செவ்வாய்க்கிழமை திதி: சஷ்டி காலை 8 மணி வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.43 வரை. பிறகு உத்திராடம். நாமயோகம்: சுகர்மம் காலை 7.46 வரை. பிறகு திருதி. நாமகரணம்: தைதுலம் காலை 8 மணி. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.43 வரை. சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் பிற்பகல் 3.43 வரை. பிறகு திருவாதிரை. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01. அஸ்தமனம்: மாலை 5.43. ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 பரிகாரம் பால் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி - முழு விவரம்

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிராக் பஸ்வானுக்கு அதிகார பசி: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பாட்னா: லோக் ஜனசக்தி கட்​சி​யின் (எல்​ஜேபி) தலை​வர் சிராக் பஸ்​வானுக்கு அதி​கார பசி அதி​க​மாக உள்​ளது என்று ராஷ்டிர ஜனதா தளத்​தின் (ஆர்​ஜேடி) தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். பிஹார் தேர்​தலில் எதிர்க்​கட்​சிகள் அமைத்துள்ள மெகா கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக உள்​ளவர் தேஜஸ்வி யாதவ். கடந்த 2005-ம் ஆண்டு பிஹாரில் ஒரு முஸ்​லிமை முதலமைச்​ச​ராக்க தனது தந்தை விரும்​பிய​தாக​வும், ஆனால், ஆர்​ஜேடி அதற்கு உடன்​பட​வில்லை எனவும் சிராக் பஸ்​வான் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 26.10.2025 | ஐப்பசி 9 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 26.10.2025 விசுவாவசு 9 ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டல்: ஒருவர் கைது

இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தூரில் நேற்று முன்தினம் அந்த அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக ஒருவர் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, இலங்கையில் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதி ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி விளையாடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

சமஸ்திபூர்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் என்​டிஏ முறியடிக்​கும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். பிஹாரின் சமஸ்​திபூர், பேகுச​ரா​யில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அவர் வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 25.10.2025 | ஐப்பசி 8 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 25.10.2025 விசுவாவசு 8 ஐப்பசி சனிக்கிழமை திதி: சதுர்த்தி நாளை அதிகாலை 3.49 வரை. பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: அனுஷம் காலை 7.49 வரை. பிறகு கேட்டை. நாமயோகம்: சோபனம் நாள் முழுவதும். நாமகரணம: வணிசை மதியம் 2.35 வரை. பிறகு விஷ்டி. நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: பரணி காலை 7.49 வரை. பிறகு கார்த்திகை. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00. அஸ்தமனம்: மாலை 5.44. ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4 பரிகாரம் தயிர் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 அக்டோபர் 2025

மேஷம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். விவாதம் வேண்டாம். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக இருந்த டென்ஷன், அலைச்சல் விலகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். ரிஷபம்: அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் பரிதாபம்: பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது பேருந்து வேகமாக மோதியுள்ளது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற கர்னூல் பிரஜா நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

புதுடெல்லி: ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​கிறார். ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்​து, வியட்​நாம், சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் வரும் 26-ம் தேதி தொடங்​கு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நடை​பெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்​பில், முப்​படைகளுக்கு தேவை​யான ராணுவ தளவாடங்​கள் வாங்க பாது​காப்பு அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் ​பின் ராணுவ தளவாட பொருட்​கள் கொள்​முதலுக்கு உடனுக்​குடன் ஒப்​புதல் அளிக்​கப்​படு​கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடி​யில் தள வாட​ங்கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 அக்டோபர் 2025

மேஷம்: யாரையும் விமர்சித்துப் பேசாதீர். பிள்ளைகளால் செலவு வரும். சொத்து வழக்கு இழுபறியாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பளிப்பதாக ராகுல் வாக்குறுதி அளித்தும் ‘சீட்’ இல்லை: பிஹார் மலை மனிதரின் மகன் ஏமாற்றம்

பாட்னா: ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தும், பிஹார் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது என்று ‘மலை மனிதன்’ என்று புகழப்படுபவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் கயா மாவட்டம் கெலார் கிராமத்தை சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. அட்ரி பகுதியில் இருந்து வசிர்கஞ்ச் செல்ல பெரிய மலை தடையாக இருந்தது. 55 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில், தசரத் மாஞ்சி சுத்தி, உளியை மட்டுமே வைத்து மலையை உடைக்க ஆரம்பித்தார். சுமார் 22 ஆண்டுகள் தொடர்ந்து மலையை உடைத்து சாலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் நாடு முழுவதும் தசரத் அறியப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு மாஞ்சி காலமானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 அக்டோபர் 2025

மேஷம்: அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

புதுடெல்லி: தீ​பாவளி பண்​டிகை வாழ்த்​துகளை தெரி​வித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு பிரதமர் நரேந்​திர மோடி நன்றி தெரி​வித்​தார். தீபாவளி பண்​டிகை​யையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசி​யில் தீபாவளி வாழ்த்​துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

ஆக்ரா: தீ​பாவளி போனஸ் தராத​தால் அதிருப்தி அடைந்த சுங்​கச்​சாவடி ஊழியர்​கள் வேலை நிறுத்​தம் செய்​தனர். இதனால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. ஆக்ரா - லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் பதேஹா​பாத் பகு​தி​யில் சுங்​கச் சாவடி உள்​ளது. இங்​கு பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஆக்ரா - லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் சுங்​கச்​சாவடியை வாக​னங்​கள் கடப்​ப​தற்கு வசதியாக அனைத்து கதவு​களை​யும் திறந்து விட்​டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்

புதுடெல்லி: ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க்​கப்​பலில் கடற்​படை வீரர்​கள், அதி​காரி​களு​டன் பிரதமர் மோடி தீபாவளி கொண்​டாடி​னார். அன்று நடை​பெற்ற இரவு விருந்​தில் அவர் பங்​கேற்றார். தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாடு​வதற்​காக கோவா மற்​றும் கர்​நாட​கா​வின் கார்​வார் கடற்​கரை​யில் இந்​திய கடற்​படை​யின் முக்​கிய விமானம் தாங்கி போர்க்​கப்​பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த கப்​பலுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஞாயிற்​றுக்​கிழமை மாலை வந்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என்டிஏ, மகா கூட்டணிகளில் ‘பிணக்கு’ - பிஹார் தேர்தல் களம் யாருக்கு சாதகம்?

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் குளறுபடி செய்து பரபரப்பை உருவாக்கிய நிலையில், நிதிஷ் குமாரை முதல்வராக அறிவிக்க மாட்டோம் என பாஜக சொல்லியுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமானார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசு புகை - WHO நிர்ணயித்ததைவிட டெல்லியில் காற்று மாசு 15 மடங்கு அதிகம்

புதுடெல்லி: டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது. டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” - ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்த பேக்கரி ஓனர்!

டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் மாணவர் பிரசாந்த் கிஷோர் கட்சி சார்பில் பிரபல கணித பேராசிரியர் கே.சி.சின்ஹா தேர்தலில் போட்டி

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் புகழ்​பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிடு​கிறார். அவர் பாட்​னா​வின் கும்​ராஹர் தொகு​தி​யில் சமீபத்​தில் வேட்பு மனு தாக்​கல் செய்​தார். புகழ்​பெற்ற கணிதப் பேராசிரிய​ரான சின்​ஹா, அல்​ஜீப்​ரா, கால்​குலஸ், டிரிக்​னாமெட்​ரி, வெக்​டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்​கும் மேற்​பட்ட கணித நூல்​களை எழுதி உள்​ளார். பிஹார் மாநிலம் கைமுர் மாவட்​டம் பேயுர் கிராமத்​தில் பிறந்த சின்​ஹா, சிறு வயதிலிருந்தே படிப்​பில் சிறந்து விளங்​கி​னார். பள்​ளிப்​படிப்​பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர், பல்​கலைக்​கழக அளவிலும் முதலிடம் பிடித்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி: அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இங்குள்ள தீபங்கள் சுட்டுகின்றன’ - யோகி ஆதித்யநாத் @ அயோத்தி

அயோத்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சார்பில் தீபோற்சவ விழாவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார். “இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் அங்கம் வகித்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை உடன் ஒப்பிட்டது காங்கிரஸ் கட்சி. முன்னாளில் இங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இன்று அதே இடத்தில் நாம் தீபங்களை ஒளிர்க்க செய்கிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா பரிசு

பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன. இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து டெல்​லி​யில் நேற்று மத்​திய நிதித்​துறை அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மத்​திய ரயில்வே துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தனர். மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பேசும்​போது “ஜிஎஸ்டி குறைப்​பால் உணவு பணவீக்​கம் கணிச​மாக குறைந்​துள்​ளது. ஜி.எஸ்​.டி. சீர்​திருத்​தம் மூலம் எலக்ட்​ரானிக் பொருள் விற்​பனை சாதனை படைத்​துள்​ளது” என்​றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் தேர்தலில் ஜேஎம்எம் 6 இடங்களில் தனித்துப் போட்டி - மகா கூட்டணியில் பிளவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, மகா கூட்டணியில் இருந்து வெளியேறி 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனாலும், இப்போது வரை மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025

மேஷம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

புட்​டபர்த்தி: ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் செயல்​படும் சத்ய சாய் மருத்​து​வ​மனை​யில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்​கப்​பட்டு உள்​ளது. சத்​திய சாய்பாபா​வால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்​பர் 22-ம் தேதி ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகம் தொடங்​கப்​பட்​டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்​பியல், கதிரியக்​க​வியல், மயக்​க​வியல், கண் மருத்​து​வம், பிளாஸ்​டிக் சர்​ஜரி, ரத்த வங்கி உள்​ளிட்ட அனைத்து மருத்​துவ வசதி​களும் உள்​ளன. இந்த மருத்​துவ சேவை​கள் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என கூறிக் கொண்ட அவர்​கள், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் உங்​கள் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது என கூறி​யுள்​ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கர்​னூல்: 21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி ஒரு நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று காலை டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி - சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் முதல்வரா? - அமித் ஷா விவரிப்பு

புதுடெல்லி: அடுத்த மாதம் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனரும், தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார், மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுவாரா என்பது குறித்து மத்திய அமைச்சர் ஜெய் ஷா விளக்கம் தந்துள்ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் பாடகி மைதிலிக்கு வாய்ப்பு 

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை முதன்முறையாக தொடங்கவுள்ளார். இவரை தொடர்ந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், பக்ஸர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர இந்த பட்டியலில் ரஞ்சன் குமார் (முசாபர்பூர்), ராம் சந்திரா (ஹயாகட்), சுபாஷ் சிங் (கோபால்கஞ்ச்), சோட்டி குமாரி (பனியாபூர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சாப்ரா, சோனிபூர், ரோசிரா (எஸ்சி), பர்க், ஷாபூர் மற்றும் அகியான் தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் ரூ.13,429 கோடி திட்டம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல்

கர்னூல்: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் வந்தடைகிறார். அங்கு அவர் ரூ.13,429 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் முடிவடைந்த சில திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். கர்னூலில் ரூ.2,856 கோடி செலவில் மின் உற்பத்தி ஆலை, கர்னூல் மாவட்டம், ஓர்வகள்ளு பகுதியில் ரூ.2,786 கோடி செலவில் தொழிற்சாலை மையம், கடப்பா பொப்பர்த்தியில் ரூ.2,136 கோடி செலவில் தொழிற்சாலை மையம், கொத்தவசா - விஜயநகரம் இடையே ரூ.493 கோடி செலவில் 4-வது ரயில்வே லைன், பெந்துர்ட்தி-சிம்மாசலம் வடக்கு ரயில் நிலையம் இடையே ரூ.184 கோடி செலவில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பாலம், சப்பவரம்-ஷீலா நகர் இடையே 13 கி.மீ தூரத்திற்கு ரூ.964 கோடி செலவில் கட்டப்பட்ட உள்ள 6 வழி பசுமை நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspap...

​ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்​கள் செய்யப்பட்டது அம்பலம் 

ஜெய்​சால்​மர்: ராஜஸ்​தானில் நேற்று முன்​தினம் நடந்த பேருந்து தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 21-ஆக அதி​கரித்​துள்​ளது. புத்​தம் புதிய அந்த தனி​யார் பேருந்​தில் விதி​களை மீறி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டதே இந்த விபத்​துக்கு முக்​கிய காரணம் என்​பது தெரிய​வந்​துள்​ளது. ஜெய்​சால்​மரிலிருந்து நேற்று முன்​தினம் பிற்​பகலில் 57 பயணி​களை ஏற்​றிக்​கொண்டு ஜோத்​பூருக்கு புறப்​பட்டு சென்ற தனி​யார் பேருந்து தையாத் கிராமத்​துக்கு அருகே திடீரென தீப்​பிடித்து எரிந்​தது. இதில், 21 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தீக்​காயமடைந்த 16 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், பலரது நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்