
அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்
மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது.

உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. இந்நிலையில் அமைச்சரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திய பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Comments
Post a Comment