Skip to main content

Posts

Showing posts from December, 2020

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேட்டில் கடல் சீற்றத்தால் மீன்வளத் துறை கட்டிடங்கள் சேதம்

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சதஅலைகள் கடற்கரையை தாக்கி வருவதால் மீன் இறங்குதள கட்டிடங்கள்சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரையில் கனமழை பெய்யக்கூடும் எனசென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டுமாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் காற்று பலமாக வீசி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9 மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்களாக ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் இயக்கப்படவில்லை. இடையில் சில நாட்கள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் வழக்கமான கட்டணத்துடன் மலை ரயில் இயக்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இணைய தளம் வழியாக முன்பதிவு செய்தனர். இதனால் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ‘ஹவுஸ் ஃபுல்’-ஆக ரயில் வந்தடைந்தது. உதகை ரயில் நிலையத்தில் மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக எழுச்சி திமுகவுக்கு பிடிக்கவில்லை: மாநில தலைவர் எல்.முருகன் கருத்து

தமிழகத்தில் பாஜக எழுச்சி பெறுவது திமுகவுக்கு பிடிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசினார். ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக எழுச்சி பெற்று வருவது திமுகவுக்கு பிடிக்கவில்லை. கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னணியில் திமுக உள்ளது. விவசாயிகள் பிரச்சினை, கல்வி, கடவுள் வழிபாடு என எல்லா விஷயங்களிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணமக்களின் வசிப்பிட பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவுக்கான வசதி

மணமக்களின் நிரந்தர வசிப்பிட பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துகொள்ளும் வகையில் திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். பாமகவின் புத்தாண்டு சிறப்புபொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. இதில் அரசியல் தீர்மானமும், பொதுத் தீர்மானங்களும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சிறப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர தம்மை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பொதுக்குழு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானத்தை ராமதாஸ் முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்: சுரானா நிறுவன முன்னாள் இயக்குநரிடம் விசாரணை

சிபிஐ பராமரிப்பில் லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சுரானாநிறுவனத்தின் முன்னாள் இயக்குநரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் இறக்குமதியில் மோசடி நடந்ததாக கூறி, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல்செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும்,சுரானா நிறுவனத்தில் உள்ள 72லாக்கர்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது. லாக்கர் சாவிகளும், தங்கம் பறிமுதல் தொடர்பான பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நிரப்புவது பற்றி தலைமைச் செயலர் ஆய்வு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை சிக்கராயபுரம் கல் குவாரியில் நிரப்புவது தொடர்பாக தலைமைச் செயலர் க.சண்முகம் நேற்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை உபரி நீர் வெளியேறும் வாய்க்காலில் செக்டேம் அமைத்து மூடு கால்வாய் வழியாக தண்ணீரை திருப்பி மணப்பாக்கம் மற்றும் தந்தி கால்வாயில் தண்ணீரைக் கொண்டு சென்று சிக்கராயபுரம் கல் குவாரியில் தண்ணீரை நிரப்புவது குறித்து தலைமைச் செயலர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீயணைப்புத் துறை இயக்குநர் ஜாபர்சேட் பணி நிறைவு பாராட்டு விழா: டிஜிபி ஜே.கே.திரிபாதி பங்கேற்பு

தீயணைப்புத் துறை இயக்குநர் ஜாபர்சேட் பணி ஓய்வு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜாபர்சேட் பிரிவு உபசார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. டிஜிபி ஜே.கே.திரிபாதி கலந்து கொண்டு ஜாபர்சேட்க்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் ஜாபர்சேட் பேசும்போது, “35 ஆண்டுகால காவல் துறை பணியில் சட்டம் - ஒழுங்கு, ஆயுதப் படை, உளவுப் பிரிவு, சிபிசிஐடி, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் பணிபுரிந்த நான் காணாத உயரமும் இல்லை, காணாத வீழ்ச்சியும் இல்லை. என் கரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து காயப்பட்டிருக்கிறதே தவிர, யாரையும் கெடுத்ததில்லை. காவல் துறை பணி என்பது மிகவும் கடினமானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் ஹுக்கா பார் நடத்திய 8 பேர் கைது

சென்னையில் ஹுக்கா பார் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். புத்தாண்டையொட்டி போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக உளவு பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சென்னை பெருநகரில் போதைபொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய அனைத்து காவல் நிலையஆய்வாளர்களுக்கும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம்: இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் வழங்கியது

இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம் வழங்கியது. கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக்கருவிகள் உற்பத்தி நிறுவனம், நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புக்கான நிதியாக (சிஎஸ்ஆர்) ரூ.75 இலட்சத்தை அவசர சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு (PM CARES நிதி) வழங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு: 26 பேரை கைது செய்தது போலீஸ்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் தலைமையில் ஜாமியாத் உலாமா - இ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் கோயிலை இடித்து கொளுத்தினர். இதில் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இதுதொடர்பாக மனித உரிமை அமைப்புகளும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெர கோயில் இடித்து தீ வைக்கப்பட்டது தொடர்பாக 26 பேரை கைது செய்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களை தொடர்ந்து தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மத விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் நூருல் ஹக் காத்ரி தனது ட்விட்டர் பதிவில், ‘‘கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கான சதி. சிறுபான்மையினரி்ன் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிறுபான்மையாக உள்ளவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாப்ப...

அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி

அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாக பரவியதால் ‌2020-21ம் கல்வி ஆண்டுக்காக கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் கரோனா பரவல் சற்று குறைந்ததால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர் வருகை குறைந்து காணப்பட்டாலும், தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் சமூக வலைதளம் மூலம் மனைவியை விற்க முயன்ற கணவன் கைது

திருப்பதியில் உள்ள தேவஸ்தான கல்லூரி விடுதியில் பணியாற்றுபவர் ரேவந்த் குமார் (29). இவர் தனது தாய், தம்பியுடன் திருப்பதியை அடுத்துள்ள திம்மபாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்றே நாட்களில் வரதட்சனை கேட்டு மனைவியை ரேவந்த் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்தப் பெண், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியின் அந்தரங்க படங்களை தனது அலுவலக நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவில் ரேவந்த் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் தேவைப்படுவோருக்கு மனைவியை விற்கத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயிலை சேதப்படுத்தினால் நடவடிக்கை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் எச்சரிக்கை

ஆந்திராவில் சமீப காலமாக கோயில்கள், சிலைகள், தேர் ஆகியவற்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழங்கால தேர் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் இரவோடு இரவாக கொளுத்தப்பட்டது. இந்நிலையில், விஜயநகரம் மாவட்டம், நல்லமர்லு பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் தலை சில தினங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரயில் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு: ஆன்லைன் ரயில் டிக்கெட்:  புதிய இ-டிக்கெட் இணையதளம், கைபேசி செயலி தொடக்கம்

பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட்-19 தடுப்பூசி; அனைத்து மாநிலங்களிலும் நாளை ஒத்திகை: தயாராகுமாறு மத்திய அரசு வலியுறுத்தல்

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், தயார் நிலையை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி ஒத்திகை இடங்களில், தயார் நிலை குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை நிர்வாகிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆய்வு நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் போலீஸார் வாகன தணிக்கை: புத்தாண்டு தினத்திலும் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல தடை

ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஎஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார். மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் 8 ஆய்வாளர்கள் மற்றும் 400 போலீ ஸார் முட்டுக்காடு, நாவலூர், திருப்போரூர், மாமல்லபுரம் நகர எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட னர். இதில், பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்த நபர்களை மட்டுமே செல்ல போலீஸார் அனுமதித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்த சுற்றுச்சூழல் துறை உத்தரவு: உத்தரவை மதிக்காமல் பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார்

கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை நிறுத்துமாறு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் வரும்,மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் மாநகராட்சி, பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW Development Bank) வழங்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ல் சென்னையில் குற்றச் செயல்கள் குறைவு: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெருமிதம்

சென்னையில் 2020-ல் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயம்: பிப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு

சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயமாக்கும் அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பதால், நேர விரயம் மற்றும் எரிபொருள் வீணாகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டுமுதல் ‘பாஸ்டேக்’ என்ற மின் னணு கட்டண பரிமாற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம் : வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான தகவல் வரும் ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

01-01-2021 வெள்ளிக்கிழமை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு

வன்னியர் சமுதாயத்தினருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் முன்பு பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனுக்களை வழங்கினர். வன்னியர்களுக்கு 20% தனிஇட ஒதுக்கீடு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூகங்களுக்கு கிடைத்த இடங்களை வெளியிடக் கோரி, தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ‘சிவ, சிவ’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மஹாஅபிஷேகம் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஏசுவை சுட்ட கோட்சே’- அமைச்சர் பேச்சால் சலசலப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைத்து அரசின் நலத்திட்டங்களை வழங்கி வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: மக்கள் நலத்திட்டங்கள் எதைச் செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் இந்த அரசின் மீது குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். பொங்கல் பரிசாகப் பொதுமக்களுக்கு அரசு ரூ.2500 வழங்குவதாக அறிவித்தது. இத்துடன் இலவச வேட்டி, சேலையையும் சேர்த்தால் ரூ.3000 ஆகிறது. இது ஏமாற்று வேலை என்கிறார் எதிர்க்கட்சி தலைவர். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பார்கள். அதுபோல திமுக ஆட்சியில் அவங்க அப்பா செய்திருந்தால் புத்தர்கள் வாரிசு, ஏசுநாதர் வாரிசு என்றிருப்பார்கள். அதையே நாங்க செய்தால் ‘ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு’ என்கிறார்கள். இந்த அரசு எதைச் செய்தாலும் தப்பு சொல்கிறார்கள் என்று பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்

நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம்திருமயம் அருகே கடியாபட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தே.ஜ. கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்: பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா நகரில் நேற்றுநடந்தது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்தகூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளரு மான சி.டி.ரவி, இணை பொறுப் பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரானா நிறுவன லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 22 நிமிட வீடியோ ஆதாரம் சிக்கியது: ஆய்வு செய்யும் பணியில் சிபிசிஐடி சைபர் கிரைம்

சுரானா நிறுவனத்தின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 22 நிமிட வீடியோ ஆதாரம் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்துள்ளது. சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனம் தங்கம் இறக்குமதியில் மோசடி செய்ததாக கூறி, கடந்த 2012-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சுரானா நிறுவனத்தின் மீதும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தையும், சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் வைத்து சீல் வைத்து, அதன் 72 சாவிகளும் 400 கிலோ தங்கமும் பறிமுதல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தூதரக மற்றும் ராணுவ அளவில் நடந்தபேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சீனப்படைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இது, கடந்த ஜூன் 15-ம்தேதி இரவு இந்திய – சீன வீரர்கள் இடையே கடும் மோதலில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் ராணுவஅளவில் கடைசியாக சுசுல் பகுதியில் கடந்த நவம்பரில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்; தமிழகத்துக்கு தங்க விருது: காணொலியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் டிஜிட்டல் இந்தியா-2020 தங்க விருதை தமிழகத்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலியில் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறிவியல்பூர்வமற்ற சிகிச்சைகளால் கரோனா வைரஸ் உருமாறுகிறது: ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் தகவல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் பார்கவா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் சார்பில் நமது நாட்டில் எடுத்து வருகிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரின் பிடிபி தலைவர் வாஹீத் ஹிஸ்புல் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி: தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்

ஹிஸ்புல் தீவிரவாத அமைப்புக்கு, காஷ்மீரின் பிடிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் வாஹீத் உர் ரகுமான் பரா நிதியுதவி செய்துள்ளார் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன், காஷ்மீரின் துணை எஸ்.பி. தேவேந்திர சிங் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹிஸ்புல் தீவிரவாதிகளை காரில் அழைத்து சென்ற போது கடந்த ஜனவரி மாதம் அவர் பிடிப்பட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேவேந்திர சிங் மூலம் ஹிஸ்புல் அமைப்புக்கு மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாஹீத் உர் ரகுமான் பரா நிதியுதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வட மாநிலங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தலில் போட்டி

வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். திராவிடம் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புகின்றனர்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள் அரசியலில் நுழைவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஐஏஎஸ் அதிகாரிகளான வி.எஸ்.சந்திரலேகா, மலைச்சாமி, பி.சிவகாமி, ஐபிஎஸ் அதிகாரிகளில் ஆர்.நட்ராஜ், ஏ.எஸ்.அலெக்ஸாண்டர் என பட்டியல் தொடர்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏ.ஜி.மவுர்யா ஐபிஎஸ், ஆர்.ரெங்கராஜன் ஐஏஎஸ், சந்தோஷ்பாபு ஐஏஎஸ் ஆகியோர் இணைந்தனர். பாஜக.வில் இணைந்த கே.அண்ணாமலை ஐபிஎஸ், கட்சியின் துணைத் தலைவராகி உள்ளார். காங்கிரஸிலும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் இணைந்துள்ளார். பிரதானக் கட்சியாக இருந்தும் திமுக.வில் தற்போது முதல் முறையாக ஓய்வு பெற்றவரான வி.மகாலிங்கம் ஐஆர்எஸ் இணைந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஏர் கலப்பை பேரணி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியஅரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஏர் கலப்பை பேரணி பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பெரும்புதூர் நகர தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தேரி ஏரியில் இரவோடு இரவாக குப்பை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, பல்லாவரத்தில் 2 பகுதிகளாக உள்ளது புத்தேரி. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள்பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.இதையடுத்து, தெற்கு பகுதியில் உள்ளஏரியை ரூ.30 லட்சம் செலவில், நகராட்சி நிர்வாகம் புனரமைத்தது. வடக்குபகுதியில் உள்ள ஏரியை, பல்லாவரத்தை சேர்ந்த, ‘பசுமை பெருக சுத்தம் செய்’ என்ற அமைப்பு, பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 10 லட்சம் செலவில் தூர்வாரிஆழப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு, வடக்கு பகுதியில்உள்ள ஏரியில், மர்ம கும்பல் ஒன்றுஇரவோடு இரவாக, 20-க்கும் மேற்பட்டலோடு குப்பையை ஏரியில் கொட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை நடைபயிற்சி சென்ற பொதுமக்கள், குப்பை கொட்டப்பட்டதை அறிந்து அங்கு கூடினர். பின், குப்பை கொட்டியதைக் கண்டித்தும், மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஓடாத வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்: லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

கரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், ஓடாத வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.யுவராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டை மூலம் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்தகல்வி ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டையை அச்சடித்து, லேமினே‌ஷன் செய்துவழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள்இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபடுவதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் நேற்று வந்திருந்தனர். அங்கு நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற பிறகு, சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் கேட்கப்படும். அதன் பிறகே வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், ஈரப்பதம் மிகுந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதன் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழருவி மணியனின் அரசியல் துறவறத்துக்கு காரணம் என்ன?

திமுக, அதிமுகவுக்கு மாற்றாகஓர் ஆட்சியை கொண்டுவரும் தொடர் முயற்சியின் ஒரு கருவியாக ரஜினியைப் பயன்படுத்த நினைத்த தமிழருவி மணியன், திடீரென அரசியல் துறவற அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் பின்னணி என்ன? ‘ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' என்ற தனது சுயசரிதையை எழுதிய தமிழருவி மணியன், தன்னுடைய அரசியல் பயணத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியலுக்கு ரஜினி வரக் கோரி ரசிகர்கள் கோஷம்

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் முழக்கமிட்டனர். ‘தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை’ என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம் : நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ரிஷபம் : மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

31-12-2020 வியாழக்கிழமை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நெருடல்; தேஜஸ்வியை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்துங்கள்: நிதிஷ் குமாருக்கு ஆர்ஜேடி யோசனை

பாஜக - ஐக்கிய ஜனதாதளம் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், தேஜஸ்வி யாதவை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதள தளம் (ஆர்ஜேடி) யோசனை தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த(ஐஜத) 7 எம்எல்ஏக்களில் 6 பேர்சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இது பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் நடவடிக்கைக்கு ஐஜத எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் பிஹார் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த யாரையாவது தேர்வு செய்யட்டும் என்றும் நிதிஷ் குமார் கூறி இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கழிவுகள் எரிப்பு, மின்சார அவசர சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம்; புதிய வேளாண் சட்டங்களை ஆராய குழு: விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஜனவரி 4-ல் பேச்சுவார்த்தை

வேளாண் கழிவுகள் எரிப்பு, மின்சார அவசரச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் முன்வைத்த 2 கோரிக் கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 4-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வர விவசாய சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களை நீக்க முடியாது என்றும், இந்த சட்டங்களை ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் எனவும் விவ சாய அமைப்புகளின் பிரதிநிதி களிடம் மத்திய அரசு உறுதி அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளில் 114 பேருக்கு பாதிப்பு: 6 பேருக்கு உருமாறிய கரோனா உறுதி

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் 114 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு உரு மாறிய புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் பிரிட்டன், தென்னாப்ரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது சாதாரண கரோனா தொற்றைவிட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என மருத்துவர்கள் எச்சரித்ததால், இந்தியா உட்பட பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒவைசி கட்சியால் வாக்குகள் பிரிவதை தடுக்க தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளை ஒன்று திரட்டும் காங்.

தமிழக தேர்தலில் போட்டியிட அசாதுதீன் ஒவைசி தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் காங் கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ஹைதராபாத் எம்.பி. அசாது தீன் ஒவைசியின் அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி சமீபத்தில் நடந்த பிஹார் தேர்தலில் போட்டியிட்டது. இக்கட்சி முஸ்லிம் வாக்குகளை பிரித்து, லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றியை தடுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்

பாட்னா: பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பிஹாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சரக்கு ரயில் பாதை திட்டம் தாமதமாக காங்கிரஸ் கட்சிதான் காரணம்: முதல் வழித்தடத்தை தொடங்கிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில் பாதை திட்டம் தாமதமாவதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 2006-ல் ஒப்புதல் தரப்பட்டது. 2014 வரை இந்தத் திட்டம் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு அதன் முக்கியத்துவத்தை உணராமல் மெத்தனமாக இருந்து வந்திருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்