
ஆந்திராவில் சினிமா டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்தது. இதனால் 300-க்கும் மேற்பட்டதிரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதிகளுடன் சினிமா வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கட்ராமையா நேற்று அமராவதியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சினிமா டிக்கெட் கட்டண விவகாரம் குறித்து ஆய்வு செய்ய மாநில உள்துறை சிறப்பு செயலாளர் ஜி. விஜயகுமார்,செய்தி, தகவல் துறை ஆணையர்விஜயகுமார் ரெட்டி, விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் வீர நாயுடு உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment