Skip to main content

Posts

Showing posts from May, 2022

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறும்போது, “குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்த ஒரு ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிரவாதிகளை தேடி வருகிறோம்” என்றார். இத்துடன் மே மாதத்தில் மட்டும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, 3 போலீஸார் மற்றும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு: இதனிடையே, புல்வாமா மாவட்டம் ராஜ்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் நாளை இணைகிறார் ஹர்திக் படேல்

அகமதாபாத் : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் நாளை இணைகிறார். குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல் (28). இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து கடந்த 18-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகினார். பாஜக தலைமையை புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அதனால், அவர் பாஜகவில் சேரலாம் என்று செய்திகள் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை - மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி நிதியை வழங்கியது மத்திய அரசு

சென்னை : மாநில அரசுகளுக்கு மே இறுதி வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையாக ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும். நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களின் சொந்த வரிவருவாய் பாதிக்கப்படும் என்பதால், 5 ஆண்டுகளுக்கு இந்த பாதிப்பின் சுமையை குறைக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. அதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க, சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு, அந்த வருவாய் இழப்பீட்டுக்கான நிதியத்தில் சேர்க்கப்பட்டது. அந்த தொகை கடந்த 2017 ஜூலை முதல் மாநிலங்களுக்கு இழப்பீடாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்; தனித்துவ குரலால் தமிழிலும் வசீகரித்தவர்

கொல்கத்தா: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 53. பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார். கடந்த 1968-இல் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியிருந்தார் கேகே. 1996 முதல் திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான் முதன் முதலில் அவர் திரையில் பாடியுள்ளதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“100% பயனாளிகளுக்கு 100% பலன்” - விவசாயிகளுக்கு தவணை நிதி ரூ.21,000 கோடியை விடுவித்த பிரதமர் மோடி உறுதி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “100% பலன் 100% பயனாளிகளுக்கு சென்றடைய நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும்” என்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் காணொலி வாயிலாக பொது மக்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘நெருப்புடன் மோத தேவையில்லை’ - மவுலானாக்கள் மாநாட்டில் அறிவுறுத்தல்

புதுடெல்லி : உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி - ராமர் கோயில் வழக்கில் நவம்பர் 2019-ல் வெளியான தீர்ப்புக்கு பின்பு மதுராவின் ஷாய் ஈத்கா மற்றும் வாரணாசியின் கியான்வாபி மசூதிகளின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இச்சுழலில், நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் மவுலானாக்களின் மாநாடு, உத்தர பிரதேசத்தின் தியோபந்த் நகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 5,000 மவுலானாக்கள் பங்கேற்றனர். ஜமாத்-எ-உலாமா ஹிந்த் (ஜேயூஎச்) நடத்திய மாநாட்டில் மசூதிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ககன்யான் விண்கலத்தை உருவாக்க மருத்துவர்களுடன் இஸ்ரோ ஆலோசனை

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘ககன்யான்’ திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபற்றி இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு, அவர்கள் செல்லும் விண்கலனில் சவுகரியமான சூழல் இருக்க வேண்டும். அசாதாரணமான சூழலில் அவர்களை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். அதனால் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் விண்கலத்தை தரமாக, நம்பகத்தன்மையுடன் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு வெற்றிகரமான, மனிதனை அனுப்பும் விண்கலத்தை உருவாக்க, நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இந்த விண்கலத்தை உருவாக்குவது தொடர்பாக இஸ்ரோ பொறியாளர்கள், மருத்துவர்கள் இடையே கலந்துரையாடல்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதில் ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி : கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அந்தக் குழந்தைகளுக்கு 23 வயது நிறைவடைந்ததும் ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வி, மருத்துவம், உயர்கல்வி பயிலும்போது மாதம் ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும். கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கரோனாவால் பெற்றோர், தத்து எடுத்த பெற்றோர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 வயதை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், தங்க இடம், உணவு வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவில் சர்வீஸ் தேர்வில் 685 பேர் வெற்றி: முதல் மூன்று இடங்களில் பெண்கள் அசத்தல்

புது டெல்லி: 2021-க்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் பெண்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வை சுமார் 5 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 9214 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அதில் 1,824 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது 8 ஆண்டு கால அரசு” - பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டு காலமாக தங்கள் ஆட்சியின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார். தங்களது ஆட்சி காலத்தில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை narendramodi.in வலைதளத்திலும், நமோ செயலியிலும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபில் 424 விஐபிக்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ.க்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக விஐபிக்கள் 424 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பலருக்கு பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக 2 சீக்கிய மத அமைப்புகளின் தலைவர்கள், தேராக்களின் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், எம்எல்ஏ.க்கள் உட்பட 424 பேரின் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக போலீஸ் கூடுதல் டிஜிபி (பாதுகாப்பு) நேற்று அறிவித்தார். அவர் கூறும்போது, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு தேவைப்படுவதால் தற்காலிகமாக விஐபிக்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் மதவெறுப்பு கோஷமிட்ட சிறுவனின் தந்தையிடம் விசாரணை

ஆலப்புழா : கேரளாவின் ஆலப்புழாவில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) சார்பில் கடந்த 21-ம் தேதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் தோளில் அமர்ந்தபடி பிற மதங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினான். இது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி கண்டனத்துக்கு ஆளானது. இது தொடர்பாக பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் மதவெறுப்பு கோஷமிட்ட சிறுவனின் குடும்பம் கொச்சி அருகே பல்லுருதி என்ற இடத்தில் குடியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். தலைமறைவாக இருந்த அந்த குடும்பம் நேற்று தங்கள் வீடு திரும்பிய போது சிறுவனின் தந்தையை போலீஸார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். மதவெறுப்பு கோஷமிட்ட சிறுவனை, போலீஸார் கண்டுபிடித்தாலும், சிறார் நீதி சட்டப்படி அவனை போலீசாரால் கைது செய்ய முடியாது. அவனது குற்ற செயல்பாடு குறித்து குழந்தை நல குழுவிடம் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடன் ஆலோசனை - காணொலி மூலமாக கலந்துரையாடுகிறார்

சிம்லா : இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைநகரம் சிம்லாவில் இருந்து, அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலி மூலமாக கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வரும் 30-ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நற்பணிகள், நலத் திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடுமுழுவதும் குழாய் மூலம் குடிநீர்: 50 சதவீதம் நிறைவு

புதுடெல்லி: நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது - காங். முன்னாள் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி : நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: நேரு மறைந்து 58 ஆண்டுகள் ஆகிறது. அவரது சிந்தனைகள், அரசியல், தொலைநோக்கு பார்வை இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அவரது கொள்கைகள் நம்மை வழிநடத்தும். ஐஐடி, ஐஐஎம், எல்ஐசி, ஐடிஐ, பிஎச்இஎல், என்ஐடி, பிஏஆர்சி, எய்ம்ஸ், இஸ்ரோ, செயில், ஒஎன்ஜிசி, டிஆர்டிஓ ஆகிய அரசு அமைப்புகளை நேரு உருவாக்கினார். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்தி உள்ளது. அரசு அமைப்புகளை அழித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் டிவி நடிகையை கொன்ற லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தொலைக்காட்சி நடிகையைக் கொன்ற 2 தீவிரவாதிகள் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, புல்வாமா மாவட்டம் அவந்தி போரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஷாகித் முஷ்டாக் பட், பர்ஹான் ஹபீப் ஆகிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லடாக் பகுதியில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

புதுடெல்லி : லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். லடாக் பகுதியின் பர்தாபூர் முகாமில் இருந்து ஹனீப் என்ற இடத்தில் உள்ள துணை முகாமுக்கு நேற்று காலை ராணுவ வீரர்கள் 26 பேர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். துர்துக் செக்டார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்து விலகிச் சென்று அருகே உள்ள ஷயோக் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர். மற்ற வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிகபட்ச வேலைவாய்ப்புகளை கொண்டதாக ட்ரோன் துறை உள்ளது  - பிரதமர் மோடி

புதுடெல்லி: பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும் போது அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான "பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022" –ஐ பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் விமானிகளுடன் கலந்துரையாடிய அவர் வான்வெளி ட்ரோன் செயல் விளக்க காட்சிகளை பார்வையிட்டார். ட்ரோன் கண்காட்சி மையத்தில் புதிய தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரிராஜ் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ், மாநிலங்களின் பல அமைச்சர்கள், தலைவர்கள், ட்ரோன் தொழில்துறை உடைமையாளர்கள் கலந்துகொண்டனர். 150 ட்ரோன் விமானி சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, L...

மங்களூரு மசூதி கோயிலாக இருந்ததாக பஜ்ரங் தளம் போர்க்கொடி - 144 தடை உத்தரவு அமல்

பெங்களூரு : கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான‌ ஜும்மா மசூதி உள்ளது. அங்கு அண்மையில் புணர‌மைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோயில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் முஸ்லிம்கள் வசம் இருக்கும் இந்து கோயிலை மீட்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் வீடுகளில் திடீர் சோதனை

மும்பை : நில மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் பராப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். 2017-ம் ஆண்டு அனில் பராப் ரத்தினகிரி மாவட்டத்தை அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும், இந்த நிலத்தை 2019-ம் ஆண்டில்தான் அவர் பதிவு செய்துள்ளார். 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அந்த நிலத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு அந்த நிலம் மும்பையை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் சதானந்த் கதம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக காங். தலைவர் சிவகுமார் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு : கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க வைர நகைகளை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவகுமார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர், தற்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேரவையில் அநாகரீகமாக பேச கூடாது - அகிலேஷ் யாதவுக்கு ஆதித்யநாத் அறிவுரை

லக்னோ : உத்தரபிரதேச சட்டப்பேரவையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் 2-வது ஆட்சி காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6.15 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை உ.பி நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அகிலேஷ் யாதவ், தான் முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பணிகளை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பணி நன்றாக இருந்திருந்தால், தேர்தலில் அவரது கட்சியை மக்கள் படுதோல்வி அடைய செய்திருக்கமாட்டார்கள். விரைவுச் சாலை, மெட்ரோ எல்லாம் யார் போட்டது. சைஃபை கிராமத்தில் உள்ள உங்கள் நிலத்தை விற்று இந்த வசதிகளை செய்தது போல் பேசுகிறீர்கள்?’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை செய்த 4 பேர் கைது; பூஜைக்கு அனுமதிக்க இந்து அமைப்பினர் போர்க்கொடி

ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தினுள் அமைந்துள்ள மசூதியில், விதிகள் மீறி தொழுகை நடத்தியதற்காக சுற்றுலா பயணிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) நான்கு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'நாடாளுமன்றத்தில் சுயேச்சை குரல் ஒலிக்க வேண்டியது அவசியம்' - காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்

லக்னோ : காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் (73) அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004 – 2014) பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 2016-ம் ஆண்டு முதல் உ.பி. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்தது. இதனிடையே, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்ட்டர்: பாக். ஆதரவு 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் நஜிபாத் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவத்தினரும் போலீஸாரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார். இதனிடையே, ஸ்ரீநகரில் அஞ்சர் சவுரா பகுதியில் தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சபியுல்லா காத்ரி என்பவரையும் அவரது 9 வயது மகளையும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சபியுல்லா காத்ரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & Worl...

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேடப்படும் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

புதுடெல்லி : மகாராஷ்டிராவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேர் மீது, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (1992) (எம்சிஓசிஏ) 23(2)வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில ஏடிஜிபி மற்றும் புனே மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோர முடியாது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடுமையான எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது, அரசியல் சாசனம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று அந்த நபர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 438-வது பிரிவின் கீழ் நீதிமன்றங்களை நாடி முன்ஜாமீன் பெறலாம். ஆனால், ஒரு வழக்கில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காத ந...

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்