“ராஜ் குஷ்வாகா அப்பாவி... ‘சோனம் அக்கா’ என்றே அழைப்பார்...” - குடும்பத்தினர் பகிர்வு | மேகாலயா தேனிலவு கொலை

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவு கொலை வழக்கில் கைதான ராஜ் குஷ்வாகாவின் குடும்பத்தினர், அவரை அப்பாவி என்றும், இந்த வழக்கில் சதி காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவரது தாய் சன்னி தேவி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராஜா ரகுவன்சியின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த என் மகன் (ராஜ் குஷ்வாகா) கதறி அழுதான். அவனுக்கு நாங்கள் ஆறுதல் சொல்லியும் அழுகையை நிறுத்தவில்லை. எனது மகன் அப்பாவி. அவன் இந்த கொலை வழக்கில் திட்டமிட்ட சதி காரணமாக சிக்க வைக்கப்பட்டுள்ளான். எப்படி 20 வயதுடைய ஒருவரால் இப்படியொரு குற்றச் சம்பவத்தை செய்ய முடியும். எனது கணவரின் மறைவுக்கு பிறகு என் மகன் தான் குடும்பத்தை கவனித்து வருகிறான்” என தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment