Skip to main content

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular posts from this blog

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 நவம்பர் 2025

மேஷம்: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரம், அலுவலகத்தில் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் இரண்டரை மடங்கு அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

‘ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்’ என்ற தலைப்பில் வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு, ‘பி.எம்.கிஸான் சம்மான் நிதி’ திட்டம் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் இதே நாளில் தொடங்கப்பட்டது. இதில் விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்குரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்