Skip to main content

Posts

Showing posts from April, 2024

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமான நிலையம், மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

நாக்பூர்: நாடு முழுவதும் விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நாட்டில் உள்ள விமான நிலையங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அலுவலகம், கிழக்கு மத்திய ரயில்வே, ஒரு வங்கி, அந்தமானில் உள்ள சுற்றுலா குழுமம், ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ‘666darktriad666@gmail.com’ என்ற இ-மெயில் முகவரியில் இருந்து நேற்று மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் தாமத நடவடிக்கை ஏன்? - கர்நாடக காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முடிவை, அதன் கூட்டணி கட்சியான பாஜக வரவேற்றுள்ளது. அதேவேளையில், இந்த விவகாரத்தில் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக கர்நாடகா அரசு மீது அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சட்டம் - ஒழுங்கு மாநிலத்தின் வசம் உள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கேள்வி எழுப்பியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்தித்த மனைவி

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி இருவரும் சேர்ந்து திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்துப் பேசினர். இதுகுறித்து அமைச்சர் ஆதிஷி நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது: சிறையிலும் தன்னை பற்றி யோசிக்காமல் 2 கோடி டெல்லி மக்களை பற்றிய கவலையுடனே அர்விந்த் கேஜ்ரிவால் இருந்து வருகிறார். இன்றைய சந்திப்பின்போது டெல்லி அரசு பள்ளிகுழந்தைகளின் கல்வி நிலைகுறித்த தகவல்களை கேட்டறிந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவை உலுக்கிய ஆபாச வீடியோ சர்ச்சை: தேவகவுடாவின் மகன், பேரன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்து அரசர்களை மட்டும் அவதூறாக பேசும் ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்? - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பெலகாவி: இந்து அரசர்களை பற்றி மட்டும் அவதூறாக பேசும் ராகுல் காந்தி, முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘ஒரு காலத்தில் அரசர்களும், ஆட்சியாளர்களும் மக்களின் நிலங்களை பறித்தனர். இதை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தியது. நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, ஜனநாயகத்தை காப்பாற்றியது. அரசியலமைப்பு சாசனத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியது’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: உடற்பயிற்சி கருவிகள், அழகு சாதனங்கள் வாங்க, விவகாரங்கள் பேசி முடிக்க, ஆலோசனை கூட்டம் நடத்த, அதிகாரிகளை சந்திக்க நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயிலில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். மேஷம்: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பல வகையிலும் சேமிப்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகன பழுதை சரிசெய்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக - தலிபான் ஒப்பீடு: மாயாவதி மருமகன் மீது வழக்குப் பதிவு

லக்னோ: பாஜகவையும், தலிபான்களையும் ஒப்பிட்டு சர்ச்சையான வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் மீது உ.பி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த், “இது துரோகிகளின் அரசாங்கம். அவர்களின் கட்சி இளைஞர்களை பட்டினி போடுகிறது. பெரியவர்களை அடிமைப்படுத்துகிறது. இது புல்டோசர் அரசாங்கம் அல்ல. பயங்கரவாதிகளின் அரசாங்கம். இது போன்ற ஒரு அரசைத்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். குற்றவாளி தங்கியிருந்த விடுதி, பாழடைந்த கட்டிடம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனையும் நடத்தினர். பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். மேலும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிப்பிடத்தில் குற்றவாளி தனது தொப்பியை வீசியதும், சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் அந்த தொப்பி வாங்கப்பட்டதும் தெரியவந்தது. அதனடிப்படையில், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கு கிடைத்த முக்கிய தகவலின்படி, கர்நாடக மாநில...

“மக்களை பாதுகாக்கவே பாஜகவுடன் கூட்டணி” - சந்திரபாபு நாயுடு

அமராவதி: மக்களை பாதுகாக்கவும், எதிர்காலத்தை காக்கவுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது: “ஆந்திராவின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கெனவே அழித்துவிட்டார். எனவே அதனை பாதுகாப்பதற்கான பொறுப்பு என்னுடையது. மாநிலம் ஒரு ஆழமான பொறியில் சிக்கியுள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் இப்படி செய்தது கிடையாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகபட்சம்; உ.பி.யில் குறைவு

புதுடெல்லி : மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தவிர, கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், பிஹார் 55.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் நடந்த இதய அறுவை சிகிச்சை: தமிழகத்தில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்

சென்னை : இதய நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியர் ஒருவரின் இதய தானம் மூலம் புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார். அவரின் பெயர் ஆயிஷா ராஷன். அவருக்கு வயது 19. ஆயிஷா கடந்த பத்தாண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். 2014ம் ஆண்டே இதற்காக இந்தியா வந்த அவர், இதய செயலிழப்பை தவிர்க்க சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு கருவி மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சீக்கிரமாகவே அந்த கருவி செயலிழக்க ஆயிஷா உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக வழக்குப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், "மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்டதற்காக தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்தேஷ்காலி விவகாரத்தில் 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நில அபகரிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்கில் 5 பிரமுகர்கள் மீது சிபிஐ முதல் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அருகில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களை அபகரித்து மீன் வளர்ப்புக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், உள்ளூர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

ஹைதராபாத்: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை அன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்தது. “இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்பாக பிரிட்டிஷ் நாட்டவர்கள் சூரத் நகரில் தான் தொழில் தொடங்கினர். அதே பாணியில் சூரத்திலிருந்து தொடங்கி நாட்டை கைப்பற்றினர் பிரதமர் மோடியும், அமித் ஷாவும். அதன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.25: இரண்டாம் கட்ட தேர்தல் முதல் மோடிக்கு கார்கே கடிதம் வரை

89 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு : நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை 2-ம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் இது இரண்டாம் மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜாவையும், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திராவையும் களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார். இவர்களைத் தவிர மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஹேமமாலினி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் களத்தில் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெகன் மீதான கல்வீச்சு சம்பவம் ஒரு மாபெரும் நாடகம் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் ஒரு தேசிய ஆங்கில ஊடகத்திற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஜெகனின்ஆட்சி, மக்களை மேலும் புண்படும்படி செய்து விட்டது. இந்த நிலையில் எனது மாநிலத்தையும், எனது மாநில மக்களையும் காப்பாற்றுவதை எனது முதல் கடமையாக கருதுகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வாகனம், மின்சாரம், மரச் சாமான்கள் வாங்க, வழக்கு பேசி தீர்க்க, கடன் பைசல் செய்ய, வியாபாரக் கணக்குகள் முடிக்க, நீர்நிலைகளை சுத்தப்படுத்த நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம். மேஷம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா?

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் முன்பாக நம்முடைய மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, தேர்தலின்போது பேச்சுரிமை உறுதி செய்யப்படுகிறதா அல்லது பறிக்கப்படுகிறா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. ‘‘செல்வங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சிறுபான்மையினர், ஊடுருவல்காரர்கள் பலன் அடைவார்கள்’’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது” - பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: “பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தானின் டோங் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் நிறுத்தவோ, பிரிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது உரை ஒன்றில், நாட்டின் வளங்களை பெறுவதில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை என்று தெரிவித்திருந்தார். இது ஒரு தற்செயல் நிகழ்வு இல்லை. இது வெறும் அறிக்கை மட்டும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமே வாக்கு வங்கியும், சமரச அரசியலும்தான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: பூமி பூஜை செய்ய, நிலம் வாங்க முன்பணம் தர, சித்தர்கள், குலதெய்வத்தை வழிபட, கிரிவலம் வர, அன்னதானம் செய்ய, சொத்து விவகாரம் பேசி தீர்க்க நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மேஷம்: நினைத்தது அனைத்தும் நிறைவேறும். மனக்குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால்தெளி வடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் வெப்ப அலை: டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் வீசி வரும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாட்டில் மக்களவை தேர்தல்7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும்6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது; சிஏஏ ரத்து செய்யப்படாது’ - அமித் ஷா

ராய்ப்பூர்: எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இதனை தெரிவித்தார். “நாட்டின் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் நடந்து வரும் மக்களவை தேர்தலில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடக்கம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடங்கும் என நம்புகிறேன்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பகவான் மகாவீர் 2,550-வது ஜெயந்தி விழா டெல்லியில் உள்ளபாரத மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகைநீக்கி காது குத்த, சோறு ஊட்ட, நகைகள், வாகனம் வாங்க, சொத்து பத்திரப் பதிவு செய்ய நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் வராது என்று நினைத்திருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அதானி, அம்பானிக்கு தேசத்தின் சொத்துகள் விற்பனை’ - கார்கே காட்டம்

போபால்: அதானி மற்றும் அம்பானிக்கு தேசத்தின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். “நமது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வசம் மிகப்பெரிய சலவை இயந்திரம் உள்ளது. முன்பு துணிகளை சலவை செய்ய இயந்திரம் பயன்படுத்துவது குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

ஹைதராபாத்: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர் ரேவந்த் ரெட்டி. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனது தொகுதி மட்டுமல்லாது மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 24 மணி நேரமும் சூறாவளி பிரச்சாரம் செய்து, காங்கிரஸை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற அவர் காரணமாக அமைந்தார். அதனால், பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தும், ரேவந்த் ரெட்டிக்கு, காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவி கொடுத்தது. இதனால், ரேவந்த் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேச பாஜக வேட்பாளர் உயிரிழப்பு: யோகி ஆதித்யநாத் இரங்கல்

லக்னோ : மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான குன்வர் சர்வேஷ் சிங் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்.19) நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட ராஜஸ்தான் 12, உத்தர பிரதேசம் 8, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பிஹார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமானில் தலா ஒரு மக்களவை தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென் இந்தியாவில் பாஜக செயல்பாடு சிறப்பாக இருக்கும்: அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் 330 இடங்களுக்கு மேல் வென்றோம். இந்த முறை கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. தெற்கில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும். தென் இந்தியாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிற்படுத்தப்பட்ட மக்களை முந்தைய அரசுகள் ஏமாற்றின: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அம்ரோகா: மேற்கு உ.பி.யின் அம்ரோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கன்வார் சிங் தன்வாரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது: சமூகநீதி என்ற பெயரில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்தன. ஆனால் ஜோதிபாபுலே, அம்பேத்கர், முன்னாள் பிரதமர் சரண் சிங் ஆகியோரின் சமூக நீதி கனவை நிறைவேற்ற எனது அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

இம்பால்: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால், பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘வாக்களித்த அனைவருக்கும் நன்றி’ - முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி ட்வீட்

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது குறித்து விரிவாக பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவிலேயே உருவாக்கிய ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ஓடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் ட்ராக்கிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. இவை தவிர்த்து, இந்திய விமானப் படை விமானம் மூலமும் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் கிராமத்தின் வாய்பேச முடியாத 3 சகோதரிகள் முதல்முறை வாக்களிக்க ஆர்வம்

தோடா: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று வாய்பேச முடியாத சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2024 மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் காங்கிரஸ் எம்பி சவுத்ரி லால் சிங், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் சரூரி உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - முதல்கட்ட மக்களவைத் தேர்தல் தகவல்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்த முக்கியத் தகவல்கள்... > இன்று (ஏப்.19) 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (பொது - 73, எஸ்சி -18, எஸ்டி - 11) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் (வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் தொகுதிக்கேற்ப மாறுபடலாம்). from இந்து தமிழ் திசை : Ne...

தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி

காஜியாபாத்: மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. கடைசி நாளான நேற்று, இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் ராகுல் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டணி போட்டியிட வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக திறந்த மனதுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். இந்த விவகாரத்தில் நெகிழ்வுத் தன்மையை காட்ட விரும்பினோம். அதனால்தான் கூட்டணி கட்சிக்கு கூடுதல் இடம் கொடுத்துளோம். இதை காங்கிரஸின் பலவீனமாக பார்க்கக் கூடாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பத்திரம் குறித்த ட்வீட்டை தேர்தல் ஆணையம் நீக்க சொன்னது ஏன்? - காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என புதன்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்சினைகள் அரசு தரப்பை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது தான் காரணமா என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரது எக்ஸ் தள பதிவுகளை தேர்தல் ஆணையம் நீக்க சொல்லியதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்துக்காக இந்த நடவடிக்கை என்றும் விளக்கம் தர சொல்லியுள்ளது. இந்த சூழலில்தான் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: இன்று ஸ்ரீராம நவமி. சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேச, வங்கிக் கடன் பெற, செங்கல் சூளை பிரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும். மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக் குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன் யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது வாக்காளருக்கு விவிபாட் இயந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்’ என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 116 ரயில் நிலையங்களில் ரூ.7,100 கோடியில் மேம்பாட்டு பணிகள்

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் ரூ.7,100 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள 116 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ‘அம்ரித் பாரத்’ என்ற புதிய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளன. இதில், தெற்கு ரயில்வேயில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தமிழகத்தில் ரூ.460 கோடி பிடிபட்டதாக தகவல்

சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிக அளவிலான பணம், தங்கம் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, விளையாட்டு, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க, தரகு வியாபாரம் தொடங்க, ரகசிய ஆலோசனைகள் நடத்த நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர். வீட்டில் பழுதான மின்னணு பொருட்களை மாற்றுவீர். பழைய வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இணக்க மான போக்கை கடைபிடித்தால் வெற்றியுண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு: கேரள நபர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்தவர் நபீல்நாசர். இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த உள்ளூர் பாஜக ஆதரவாளர் ஒருவர், நபீல் நசீர் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து பலோடு காவல் துறை நபீல் நசீர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. கலவரத்தைத் தூண்டுதல், தேர்தலை நோக்கமாகக் கொண்டு பொய் தகவலைப் பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக நபீல் நாசர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 20-ம்தேதி முதல் நபீல் நாசர் தனதுமுகநூல் பக்கத்தில் பிரதமர்மோடிக்கு எதிராக பதிவிட்டு வந்துள்ளதாக எப்ஐஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் மகன் குதித்து விளையாடும் காணொலியால் சர்ச்சை

புதுடெல்லி: பமேளா சத்பதி என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த வியாழன்று காணொலியுடன் கூடிய ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டார். அந்த காணொலியில் அவரது மகன் ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலக அறை மேஜை மீது ஏறிக் குதித்துக் கொண்டிருந்தான். சூப்பர்மேன் டீ ஷர்ட் அணிந்து காட்சியளித்த அந்த சிறுவன் சினிமா கதாநாயகர்களின் பிரபல வசனங்களைப் பேசியபடி விளையாடினான். அப்போது ஐஏஎஸ்அதிகாரி பமேளா சத்பதி தனது பணியைச் செய்து கொண்டிருந்தார். இந்த காணொலியுடன் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு: இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பருவகாலம், சிறுவனின் தாயாக ஆனப்பின்னர் உங்களை மிகவும் பயமுறுத்தக்கூடியதாக மாறிப்போகும். அதுதான் கோடை விடுமுறை. இவ்வாறு அவர் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்