Skip to main content

Posts

Showing posts from July, 2021

ரூ.3.52 கோடியில் உயர்நிலை பாலம்: பெரும்பாக்கத்தில் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

மழைநீர் செல்ல வசதியாக சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.3.52 கோடியில் உயர்நிலை பாலத்துக்கு அமைச்சர்கள் பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டிவைத்தனர். பெரும்பாக்கத்தில் மழைநீர் செல்வதற்கு வசதியாக ஏற்கெனவே சிறிய அளவில் உள்ள பாலத்தை ரூ.3.52 கோடியில் உயர்நிலைப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆடி கிருத்திகை, ஆடி ஞாயிறையொட்டி முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு

ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டையொட்டி முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. சூரனை அழித்து தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை விரத நாள் கடைபிடிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நேற்று இணையவழியில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த பாராட்டு விழாவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராமதாஸை வாழ்த்தி பேசினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு

கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 1,911 அலுவலக உதவியாளர்கள், 110 சுகாதார பணியாளர்கள், 496 காவலர்கள், 593 மசால்ஜி மற்றும் இரவுக் காவலர்கள், 189 துப்புரவு பணியாளர்கள், 28 தோட்டக்காரர்கள் உள்ளிட்ட 3,200-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு: டிஜிபி வெளியிட்ட அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளித்திருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தல்

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்தக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் நாளை மனு கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே தேர்தல் நடத்தாத மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சபைக்கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு கமல் அறிவுரை கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பராமரிப்பு பணிகள் காரணமாக அரக்கோணம் தடத்தில் இன்று மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவு: பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு

வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தடத்தில் பாதுகாப்பு ஆணையர் குழுவினர் விரைவில் ஆய்வு நடத்தஉள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதையடுத்து, வேளச்சேரியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தூண்களும் அமைக்கப்பட்டன. வேளச்சேரியை அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. தற்போது ஆதம்பாக்கம் வரையில் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கத்தில் தேவி பாலியம்மன், அகத்தீஸ்வரர், சவுமிய தாமோதரப் பெருமாள் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயில்களின் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு வழங்கியதற்கு விஜயகாந்த், கமல்ஹாசன் வரவேற்பு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தமாணவர்கள் 71 சதவீதம் பேர் இருக்கிறார்கள். எனவே, மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன சொத்துகளை உரிமை மாற்றம் செய்ய தடை: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன சொத்துகளை எம்ஜிஎம் நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் லீ மெரிடியன்ஸ் என்ற பெயரில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர ஹோட்டல்களை நடத்திவருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிமுக முன்னாள் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி கு.பரசுராமன் அக்கட்சியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். அதிமுக முன்னாள் எம்பியும்,அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தவருமான கு.பரசுராமன் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 29-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நில அளவீடு செய்வது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த தனி நீதிபதி, "நவீனஇயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாட்களில் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும். தவறினால் கட்டணத்தை திரும்பவழங்க வேண்டும். நில அளவீட்டுக்கு தனிப்பதிவேடு பராமரிக்கவேண்டும். நில அளவையர்கள் குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகத் தரம் மிக்க புலிகள் காப்பகமாக ஆனைமலை, முதுமலை காப்பகங்களுக்கு அங்கீகாரம்

கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் நீலகிரி முதுமலை புலிகள்காப்பகங்களை உலகத் தரமிக்கபுலிகள் காப்பகமாக அங்கீகரித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தியாவில் 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் உலக அளவிலான புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்துதல் ஆய்வினை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2020-ம் ஆண்டு செயல்படுத்தியது. அதில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாடு ஆகியன கணக்கிடப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் 50 சதவீதம் அதிக மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விரைவில் குணமாகலாம், எதிர்ப்பு சக்தி குறையாது; பல நன்மைகளை வழங்கும் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: ‘தி இந்து’ கருத்தரங்கில் அப்போலோ மருத்துவர் யூசுஃப் தகவல்

நோயாளிகளுக்கு ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை பல நன்மைகளை வழங்குவதாக சென்னை அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுஃப் தெரிவித்தார். ‘தி இந்து’ நாளிதழ் கடந்த 29-ம் தேதி நடத்திய சுகாதார நலம் பற்றிய இணைய வழி கருத்தரங்கில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுஃப் உரையாற்றினார். அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிதம்பரத்தில் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் கேக் வெட்டிய 8 பயிற்சி மருத்துவர்கள் இடைநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. இதில், ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 2-வது நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பயிற்சிமருத்துவர் ஒருவரது பிறந்தநாள்விழா கடந்த 28-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில், அவருடன் பயிலும் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா நோய் எதிர்ப்புத் திறன் தமிழகத்தில் 66% பேருக்கு உள்ளது: பொது சுகாதாரத் துறை ஆய்வில் உறுதி

தமிழகத்தில் 66 சதவீதம் பேருக்குகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையிலான குழுவினர், தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆய்வை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துணைக்கோள் நகரத்துக்குச் செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை: உயர் நீதிமன்றம் தடை

திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை என்னும் கிராமத்தில், 160 ஏக்கர் பரப்பில் உலக தரம் வாய்ந்த துணைக்கோள் நகரம் அமைக்க அரிஹந்த் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் அந்த பகுதியில் உள்ள கோவில் நிலம் மட்டுமல்லாமல் திருவாழி குட்டை மற்றும் அம்பாள் ஏரிக்களுக்கிடையே 60 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; தேர்தல் நடத்தும் அலுவலரை இன்றைக்குள் நியமிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை இன்றைக்குள் (ஜூலை 31) நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரகஉள்ளாட்சித் தேர்தல்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையச் செயலர் எ.சுந்தரவல்லி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளாண் தொழிலை லாபகரமாக்க தனி நிதிநிலை அறிக்கை; புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும்: வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

தமிழக அரசில் வேளாண் துறைக்குஇந்த ஆண்டு முதல் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வேளாண் துறைஈடுபட்டுள்ளது. இந்நிலையில், வேளாண் வர்த்தக அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்றுநடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக மீன்வளத் துறையின் இணையதள பக்கத்தை தமிழில் வடிவமைக்க முடிவு

மீன்வளத் துறையின் இணையதளத்தை தமிழில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் இன்ஜின், வலை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நல வாரியத்தில் வழங்கப்படும் உதவி தொகைகள் உட்பட பல்வேறு விவரங்கள் மீன்வளத் துறையின் இணையதளத்தில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகேதாட்டு அணை கட்ட அனுமதியளித்த பிரதமரை கண்டித்துதான் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்: விவசாயிகள் சங்க நிர்வாகி பி.ஆர்.பாண்டியன் கருத்து

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுபொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனாவிடம் மனு அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடைகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: கோயம்பேடு சந்தை நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை

கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கான பராமரிப்புக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன், கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்து வெளியிடும் காங்கிரஸார் மீது கடும் நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடும் காங்கிரஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு

சென்னை, அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில். இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வு வழிகாட்டுதலுக்கான புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான எம்.கே.சண்முகசுந்தரம் எழுதிய Interviews Redefined (நேர்காணல்களின் மறுவரையறை) என்ற தலைப்பிலான புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. முதல்பிரதியை கடந்த ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி பூரணசுந்தரி பெற்றுக்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார். கோட்டை, கொத்தளங்களுடன் உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததைஅடுத்து, அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மேலாய்வின்போது கருப்பு, ஊதா வண்ணவளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்றகண்ணாடி படிகம், குறியீடுகளுடன்கூடிய பானை ஓடுகள் கிடைத்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வரை கண்டித்து தஞ்சையில் பாஜக ஆக.5-ல் போராட்டம்: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து ஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவி, ஓய்வூதிய நிலுவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகள், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்தை கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். தொடர்ந்து, 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் 15 தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் கடந்த 2006 செப்டம்பர் முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சித்தூர் - தச்சூர் 6 வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: கையகப்படுத்தப்பட்ட நில ஆவணங்களை தர மறுத்த விவசாயிகள்

சித்தூர்- தச்சூர் 6 வழிச் சாலைதிட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து,அத்திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கான ஆவணங்களை, ஊத்துக்கோட்டை பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து எண்ணூர் காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாக வருவதற்காக, ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலம், சித்தூர் முதல், திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் வரை 126.550 கி.மீ. தொலைவுக்கு, பெங்களூரு- சென்னை அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இயற்கை வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்: காஞ்சிபுரத்தில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 போகம் நெல் பயிரிடும் விவசாயிகள் பலர் உள்ளனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் மையங்கள் குறைந்த அளவே இயங்குகின்றன. ஒரிரு போகத்துக்கு மட்டும் சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இயங்குகின்றன. நேரடி நெல் கொள்முதல் மையங்களை அதிகரிப்பதுடன் 3 போகத்துக்கும் தேவையான அளவு நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆடி கிருத்திகைக்கு முருகன் கோயில்களில் - சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை: அறநிலையத் துறை இணை ஆணையர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் பிரசித்தி பெற்றகந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடிக் கிருத்திகை நாளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக காவடி சுமந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தற்போது, கரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆடிமாத பரணி நாளான ஆக.1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஆடிக் கிருத்திகை நாளான ஆக. 2-ம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் வருகையால் ஆக.2-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்கள் 1 மணிக்கு பணியை முடிக்க உத்தரவு

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ம் தேதி வருவதால், அன்றைய தினம் தலைமைச் செயலக ஊழியர்கள் பகல் 1 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குசெல்லுமாறு உத்தரவிடப்பட்டுஉள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகவளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பராமரிப்பு பணியால் 3 மின்சார ரயில்கள் இன்று ரத்து

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்தடத்தில் வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி ஜிவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11.05 மணி முதல் மதியம் 1.05 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சி.ராமகிருஷ்ணா நினைவு அஞ்சலி கூட்டம்: இணைய வழியில் இன்று நடக்கிறது

மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணாவின் நினைவு அஞ்சலிக் கூட்டம், இணைய வழியில் இன்று (ஜூலை 31) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் ஜமீன்குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. இவர் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்தார். வேளாண்மையில் அதிக ஆர்வம்கொண்ட அவர், சி.சுப்பிரமணியம் என்பவர் நடத்திவந்த தேசியவேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனது நிலத்தை இலவசமாக வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரயில் நிலையங்களில் முகக்கவசம் விற்பனை: பயணிகள் வேண்டுகோள்

ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக் கவசம் அணியாத பயணிகளிடம் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘முகக்கவசம் அணியவில்லை என்று கூறி, பயணிகளிடம் ரூ.500 அபராதம் வசூலிப்பது நியாயம் அல்ல. உண்மையில் பயணிகள் மீதுஅக்கறை இருந்தால், பயணிகளுக்கு இலவசமாக முகக்கசவத்தை ரயில்வே விநியோகம் செய்யலாம். ரயில் நிலையங்களில் முகக்கவசம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யலாம்’’ என்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்திஉள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெபடைட்டிஸ் பற்றிய விளக்கக் கையேட்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து மருத்துவ களப்பணியாளர்களுக்கான ஹெபடைட்டிஸ் தடுப்பூசிபோடும்முகாமை தொடங்கிவைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் 40 ஆயிரம் ஏக்கரை மீட்க நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு; குழுக்களை அமைக்கவும் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள் ளன. இந்த நிலங்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங் களை மீட்கவும், கோயில் நிலங்களின் விவரங்களை இணையத்தில் பதி வேற்றம் செய்யவும் இரு குழுக்களை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்