Skip to main content

Posts

Showing posts from June, 2025

தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பர்கள் ஜைப் அகமது, மிரமித் முகர்ஜி, கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு குறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பிரதான எதிரி மனோஜித் மிஸ்ரா, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. மானபங்கம், திருட்டு, அடிதடி என அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு - நடந்தது என்ன?

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ளபஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

புதுடெல்லி: நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இது 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. கட்டண சீரமைப்பின் முக்கிய அம்சங்கள்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

புதுடெல்லி: ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள் உடன் கூடிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்செய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் வீட்டின் நிலைமை, சொத்துகள் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 30.06.2025 | ஆனி 16 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 30.06.2025 விசுவாவசு 16 ஆனி திங்கள்கிழமை திதி: பஞ்சமி காலை 9.24 மணி வரை, பிறகு சஷ்டி. நட்சத்திரம்: மகம் காலை 7.18 வரை, பிறகு பூரம். நாமயோகம்: சித்தி மாலை 5.16 வரை, பிறகு வியதீபாதம். நாமகரணம்: பாலவம் காலை 9.24 வரை, பிறகு கெளலவம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: மந்தயோகம் காலை 7.18 வரை, பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: திருவோணம் காலை 7.18 வரை, பிறகு அவிட்டம். சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45 அஸ்தமனம்: மாலை 6.39 ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3, 9 சந்திராஷ்டமம் தயிர் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சிறிய வாய்ப்புகளையும் சாதுர்யமாக பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ரிஷபம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். சேமிப்பு மேலும் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். அதன்​படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நீண்ட காலத்​துக்​கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்​திரை மீண்​டும் தொடங்​கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்: பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிகா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். இதற்கான பயணத்தில் ஜூலை 2 முதல் 9 வரை பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” - பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதளங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு சார்பில் சுற்றுலா விசா, வர்த்தக விசா, மாணவர் விசா, பணி விசா, உறவினர்களை சந்திக்க சார்பு விசா என பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களை பெற டிஎஸ்-160 படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். ரிஷபம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர். ரிஷபம்: பழைய கடன்களைத் தீர்க்க வழி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ - சரத் பவார்

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மராத்தி மட்​டுமே கட்​டாய மொழி என அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா பயணம்

புதுடெல்லி: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவை சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் துணை அதிபர் ஹான் ஜெங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலும் தோவல் பங்கேற்க உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘உன்னத சுதந்திரத்தை விரும்பும் இந்திய மக்களுக்கு நன்றி’ - ஈரான் தூதரகம்

புதுடெல்லி: இஸ்ரேல் உடனான மோதலில் தங்கள் தேசத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மக்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது புதுடெல்லியில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம். மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 நாட்கள் மோதல் நீடித்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றதோடு ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதுடெல்லியில் அமைந்துள்ள ஈரான் தூதரகம் புதன்கிழமை அன்று எக்ஸ் தள பதிவு மூலம் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு - மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் இன்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிக்கு இருந்துவந்த சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மனைவி யுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம்

புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் சுவாரஸ்ய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகம், தோற்ற பொலிவு கூடும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப்பார்கள். பயணம் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டி குறையும். ரிஷபம்: வீண் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். தெய்வ வழிபாடு மனநிறைவு, அமைதியை தரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேச கூடாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ல் கடற்படையில் சேர்ப்பு

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்

ஈரானிலிருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் ‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’ என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்பட்டதால், ஈரான் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களை தாய்நாடு அழைத்து வர வேண்டும் என அவர்களது பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் - இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா தின விழா: மோடி தலைமையில் 3 லட்சம் பேர் கின்னஸ் சாதனை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா தின விழாநடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? - மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்

மும்பை: ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின் மற்றொரு கிளைக்கு அவர்கள் வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடக்கம்

காங்டாக்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஊழலில் தொடர்புடைய 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.7.42 கோடி மோசடி வழக்கு: மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் கைது

ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும். மேலதிகாரி பாராட்டுவார். ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீட்டில் நிம்மதி பிறக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து - வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு பிறகு மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: எதிரிநாட்டு நீர் மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலான போர்க் கப்பல் ஒன்றை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) தயாரித்து கடற்படையிடும் கடந்த மே மாதம் 8-ம் தேதி ஒப்படைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 19.06.2025 | ஆனி 05 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 19.06.2025 விசுவாவசு 5 ஆனி வியாழக்கிழமை திதி: அஷ்டமி காலை 11.56 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 11.15 வரை. பிறகு ரேவதி. நாமயோகம்: சௌபாக்யம் மதியம் 2.42 வரை. பிறகு சோபனம். நாமகரணம்: கௌலவம் காலை 11.56 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பூரம். சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 சந்திராஷ்டமம் தைலம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையுண்டு. கூட்டுத் தொழிலில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் கூடும். அலுவலகரீதியான பயணம் திருப்திகரமாக அமையும். ரிஷபம்: வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமுண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்ப உறுப்பினர்களுடன் சென்று நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் அமர்நாத் யாத்திரை பகுதியில் பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை

ஸ்ரீநகர்: அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் "பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி" களாக அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். ரிஷபம்: வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணம் கைகூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? - ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்' பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட முடி​யாது''என்று கூறி, மன்​னிப்பு கேட்​கு​மாறு வலி​யுறுத்​தி​னார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுகிறது: சைப்ரஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

லிமாசோல்: உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியா-சைப்ரஸ் சிஇஓ அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவில் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி மற்றும் பல ஆயிரம் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் மூலம் வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு தெளிவான மற்றும் நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதைத்தவிர, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு தேவையான முதன்மையான முக்கியத்துவத்தையும் அரசு அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 17.06.2025 | ஆனி 03 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 17.06.2025 விசுவாவசு 03 ஆனி செவ்வாய்க்கிழமை திதி: சஷ்டி மதியம் 2.47 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: சதயம் நள்ளிரவு 12.59 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: விஷ்கம்பம் காலை 9.30 வரை. பிறகு பிரிதி. நாமகரணம்: வணிசை மதியம் 2.47 வரை. பிறகு விஷ்டி. நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: ஆயில்யம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36 ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 7 சந்திராஷ்டமம் பால் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள். ரிஷபம்: செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். மேலதிகாரி பாராட்டுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறை பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி : அரசு​முறை பயண​மாக பிரதமர் மோடி நேற்று சைப்​ரஸ் நாட்​டுக்கு புறப்​பட்டு சென்​றார். சைப்​ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடு​களில் அவர் 5 நாள் பயணம் மேற்​கொள்​கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள விமானப்​படை தளங்​கள் மற்​றும் தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. இதை தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பல்​வேறு கட்​சிகளை சேர்ந்த எம்​.பி.க்​கள் குழு​வினர் உலகின் பல்​வேறு நாடு​களுக்​கும் சென்​று, பாகிஸ்​தானின் எல்லை தாண்​டிய தீவிர​வாதம் குறித்து நேரடி​யாக விளக்​கம் அளித்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விழைவு தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனே ஆற்றுப் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - பலர் மாயம்

புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சைப்ரஸ், கனடா, குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம்: வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர். ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடி காப்பீடு தொகை

அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடி காப்பீடு தொகை கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து காப்பீட்டு துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியை சந்தித்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமருடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விஜய் ரூபானிக்கு ‘1206’ என்ற அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுள் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். இந்த கோர விபத்தில் அவரது அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும் (68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்