Skip to main content

Posts

Showing posts from September, 2024

காஷ்மீரில் இன்று இறுதிகட்ட தேர்தல்: 40 தொகுதிகளில் 415 வேட்பாளர்கள் போட்டி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.வாக்குப்பதிவு மையங்களில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 114-வது மனதின்குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது 10 வயதாகி விட்டது. இந்த நிகழ்ச்சியை ஓர் இயக்கமாக மாற்றிய மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேடையில் மயங்கி சரிந்த கார்கே: தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லேசாக சரிந்த அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். பின்னர் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நரகத்தில் இருந்தாலும் கண்டுபிடிப்பேன்: தீவிரவாதிகளுக்கு ஜம்முவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஜம்மு நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர்நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு இதே நாள் (செப். 28) நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. “இது புதியஇந்தியா, அவர்கள் (பாகிஸ்தான் தீவிரவாதிகள்) எங்கள் வீட்டில்(நாட்டுக்குள்) புகுந்து தாக்குதல்நடத்தி வீரர்களை கொன்றார்கள். அதற்கு தக்க பதிலடி கொடுத்தோம்” என உலக நாடுகளிடம் தெரிவித்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

29.09.2024 குரோதி 13 புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை திதி: துவாதசி மாலை 4.48 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: மகம் நாள் முழுவதும். நாமயோகம்: சாத்தியம் இரவு 12.22 வரை. பிறகு சுபம். நாமகரணம்: தைதுலம் மாலை 4.48 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.59. ராகு காலம் மாலை 4.30-06.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 5, 9 சந்திராஷ்டமம் திருவோணம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்: ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு

திருமலை: திருப்பதி லட்டு பிரசாத கலப்பட நெய் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு தனது ஆய்வை நேற்று தொடங்கியது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர மாநில அரசுநியமித்தது. குண்டூர் ஐஜி சர்வாஷ் ரெஷ்த் திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு நேற்று முதல் விசாரணையை தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பான பெண் தொழிலாளர்கள்

புதுடெல்லி: இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என மத்திய தொழிலாளர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது: இந்தியாவின் தொழிலாளர் சக்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் மாற்றம் அடைந்துள்ளது. பெண்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடைகளை உடைத்து, அதிக பொறுப்புகளை ஏற்று முன்னிலை வகிக்கின்றனர். இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. சில துறைகளில் அவர்கள் ஆண்களை விட அதிக நேரம் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றம் இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் ஏற்பட்டுள்ள மவுனப் புரட்சி ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனே, டெல்லி, கொல்கத்தா ஆராய்ச்சி மையங்களில் பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் புனேவில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.20,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பலத்த மழை காரணமாக புனே அரசுநலத்திட்ட விழா ரத்து செய்யப்பட்டது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக சில முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு. ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர்தான் ஆனால் அவர் கடவுள் அல்ல” - கேஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சக்திவாய்ந்தவர்தான். ஆனால் அவர் ஒன்றும் கடவுள் அல்ல என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமாவுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லி சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “என்னையும் மணிஷ் சிசோடியாவையும் இங்கு பார்ப்பது எதிர்கட்சியில் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கு சோகமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக கடந்த வாரம் (செப்.18) 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.26 - அக்.2

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது. பலன்கள்: இந்த வாரம் தன்னுடைய தேவைகளை தானே செய்து கொள்வீர்கள். மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள். புத்திசாதுரியமும், வாக்கு வன்மையும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் உண்டாகும். நல்ல மனிதர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை வழங்குவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் இளம்பெண் வீட்டில் ரகசிய கேமராக்கள் - உரிமையாளர் மகன் கைது

புதுடெல்லி: டெல்லியில் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் இளம்பெண் வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவ்வீட்டின் உரிமையாளரும், அவரது மகன்களும் கைதாகி உள்ளனர். டெல்லியின் கிழக்கு பகுதியிலுள்ள ஷக்கூர்பூர் பகுதியில் ஓர் இளம்பெண் வாடகை வீட்டில் வசிக்கிறார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் குடிமைப் பணி தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி பெற்று வருகிறார். இவரது வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்துள்ளது. இதை யதேச்சையாகப் பார்த்து அதிர்ந்த அந்த இளம்பெண் ஷக்கூர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனித தவறுகளால் நிகழும் விமான விபத்துகள் 10 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்

புதுடெல்லி: மனித தவறுகளால் நிகழும் விமானவிபத்துகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமான விபத்துகளில் மனித காரணிகள் என்ற தலைப்பில் முதல் தேசிய பாதுகாப்பு கருத்தரங்கம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் மோகன் நாயுடு இதுகுறித்து மேலும் கூறியதாவது: உலகளவில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் 80 சதவீத விபத்துகளுக்கு மனித தவறுகளே முக்கியகாரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் தற்போது 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ரூ.8,000 கோடி தேவை: ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 18-ம் தேதிஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இது தொடர்பான (அரசியல் சாசன திருத்த) மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வது சவாலான விஷயமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியல் முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைப்பது வரையிலான தளவாட சிக்கலையும் அரசு எதிர்கொள்ள வேண்டி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே அடித்தளம்: சிஇஓ-க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நியூயார்க்: இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே அடித்தளம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூகுள், அடோபி உள்ளிட்ட 15 பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் (சிஇஓ) பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: 21-ம் நூற்றாண்டை தொழில்நுட்பம் வழி நடத்துகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சிய பாதையில் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே அடித்தளமாக அமைந்துள்ளது. உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தித் துறையில் உலகத்தின் முன்னோடியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. உலகம் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சவால்களுக்கு இந்தியா, அமெரிக்காவால் சிறந்த தொழில்நுட்ப தீர்வை வழங்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி, உ.பி.யில் காஸ் சிலிண்டர் வைத்து ராணுவ சிறப்பு ரயிலை கவிழ்க்க சதி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ரயில் டிரைவர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் ராணுவ சிறப்பு ரயில் தப்பியது. ஜம்மு காஷ்மீரில் இருந்து கர்நாடகாவுக்கு ராணுவ சிறப்பு ரயில் கடந்த புதன்கிழமை புறப்பட்டது. இந்த ரயில் மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வெடிச் சத்தம் கேட்டது. இதனால் சுதாரித்த ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி அருகில் உள்ள ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை அதிபரானார் அநுரா குமார திசாநாயக்க: இன்று பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க (56) வெற்றிபெற்றார். இலங்கையின் 9-வது அதிபராக இன்று பதவியேற்க உள்ளார். இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில், 38 வேட்பாளர்கள் களத்தில்இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர்தான் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

22.09.2024 குரோதி 6 புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை திதி: பஞ்சமி பிற்பகல் 3.44 வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: கார்த்திகை இரவு 11 வரை. பிறகு ரோகிணி. நாமயோகம்: ஹர்ஷணம் காலை 8.13 வரை, பிறகு வஜ்ரம். நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.44 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 6.04. ராகு காலம் மாலை 4.30-06.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2, 7 சந்திராஷ்டமம் சுவாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரில் இருந்து 900 தீவிரவாதிகள் ஊடுருவல்: மணிப்பூரில் பாதுகாப்பு படைகள் உஷார்

இம்பால்: மியான்மரில் பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் நுழைந்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததை தொடர்ந்து மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்டை நாடான மியான்மரில் 900 குகி தீவிரவாதிகள் டிரோன் மூலம் குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது மற்றும் வனப் போர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ஆதிஷி: 5 அமைச்சர்களும் பொறுப்பேற்பு

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம்: தேவஸ்தானம் அறிக்கை அளிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருமலை : திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் குறித்த விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசி சிறு சிறு கருத்து மோதல் வந்தாலும் சமாளிப்பீர். உடல் சோர்வு, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்குப்பதிவு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தை வலுவாக்குகிறது காஷ்மீர்: பிரதமர் மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர் வலுவாக்கி வருகிறது என்று 2-ம் கட்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஸ்ரீநகர்,கத்ரா பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: “காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதியவரலாறு படைக்கப்பட்டுள்ளது. கிஷ்துவாரில் அதிகபட்சமாக 80 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர்வலுவாக்கி வருகிறது. இதை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவில் காஷ்மீர் மக்கள் புதிய சாதனை படைக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக உறுதி

கொல்கத்தா: மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் பணியிடத்தில் பாதுகாப்பான பணிச்சூழல் வேண்டியும், சுகாதார பணியாளர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் ஊழல் முறைகளுக்கு காரணமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைதியாக நடந்தது முதல்கட்ட தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் 59 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், ஜம்முவில் 3 மாவட்டங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4 மாவட்டங்கள் என மொத்தம் 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 90 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம்3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஒப்புதல்

புதுடெல்லி: மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஜெகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு” - சந்திரபாபு நாயுடு ‘பகீர்’ குற்றச்சாட்டு

திருப்பதி: முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று (செப்.18) மாலை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதலும், வலுக்கும் எதிர்ப்பும்

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பது அவர்களது வாதம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின்படி தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. ஒரே நாடு, ஒரே தேர்தல் - உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடிசாவில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி: சுபத்ரா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம்பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார். சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றார். ஒடிசா தேர்தலின்போது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 5 ஆண்டுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சுபத்ரா என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகினார்: டெல்லி முதல்வர் ஆகிறார் ஆதிஷி - விரைவில் பதவியேற்பு விழா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித் துறை அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். துணைநிலை ஆளுநரை சந்தித்து, அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 15-ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘முதல்வர் பதவியை அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். புதிய முதல்வரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த சட்டப்பேரவை தேர்தல் வரை பதவியில் அமரமாட்டேன். வரும் தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்ற பிறகே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் ‘நமோ பாரத்’ விரைவு மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் - புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: மத்தியில் தொடர்ச்சியாக 3-வது முறை பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்படும் நமோ பாரத் ரேபிட் ரயில் திட்டத்தால், ஒருநகரில் இருந்து மற்றொரு நகருக்கு விரைவாக செல்ல முடியும். முதல்கட்டமாக அகமதாபாத் - புஜ் இடையே இந்த ரயில்சேவை தொடங்கப்படுகிறது. படிப்படியாக நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய முஸ்லிம்கள் குறித்த பதிவு: ஈரான் மதகுருவுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி : இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்களை மறந்துவிட்டால் நாம் நம்மை முஸ்லிம்களாகவே கருதமுடியாது” என்று தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை: காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: டாடா நகர் - பாட்னா, கயா - ஹவுரா உட்பட 6 வழித்தடங்களில் வந்தே பாரத்ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். டாடா நகர் - பாட்னா, பாகல்பூர் - தும்கா - ஹவுரா, பிரமாபூர் - டாடாநகர், கயா - ஹவுரா, தியோகர் - வாராணசி மற்றும் ரூர்கேலா - ஹவுரா ஆகிய 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவாலின் ராஜினாமா முடிவு: டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? 

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்.13-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறையிலிருந்து அவர் அன்று மாலையே வெளியே வந்தார். இதனையடுத்து, இன்று (செப்.15) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 48 மணி நேரத்துக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். இது டெல்லி அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்த பிறகு டெல்லியில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களும் அடிபடத் தொடங்கியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

15.09.2024 குரோதி 30 ஆவணி ஞாயிற்றுக்கிழமை திதி: துவாதசி மாலை 6.13 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: திருவோணம் மாலை 6.47 வரை. பிறகு அவிட்டம். நாமயோகம்: அதிகண்டம் பிற்பகல் 3.09 வரை. பிறகு சுகர்மம். நாமகரணம்: பவம் காலை 7.32 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் மாலை 6.47 வரை. பிறகு மந்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.09. ராகு காலம் மாலை 4.30-06.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆக்ராவில் கனமழை: தாஜ்மஹால் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டு ஷாஜகான் கல்லறைக்குள் தண்ணீர் புகுந்தது

ஆக்ரா: உத்தர பிரதேசம் ஆக்ராவில் 48மணிநேரம் பெய்த தொடர் கனமழையால் 151 மிமீ மழை கடந்த வியாழன் அன்று பதிவானது. இதனால் நகரில் உள்ள பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இந்தியதொல்லியல் துறை உணர்ந்தது. இதனையடுத்து, பாரம்பரிய சின்னங்களின் நிலையை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளும் பணியை ஊழியர்களிடம் ஒப்படைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுபான கொள்கை ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிஉள்ளது. அலுவலகம் செல்லவும், கோப்புகளில் கையெழுத்திடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதில் அக்கட்சியினர் ரூ.100 கோடி லஞ்சம்பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. எனினும், இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்ததலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசியஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐயும் அவரை கைது செய்தது. இந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜூலை 12-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், சிபிஐ கைது செய்ததால் சிறையில்இருந்து அவர் விடுதலையாக முடியவில்லை. from இந்து தமிழ் தி...

தலைமை நீதிபதி வீட்டு பூஜையில் பிரதமர் பங்கேற்றதை விமர்சிப்பதா? - எதிர்க்கட்சியினருக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் பூஜையில், பிரதமர் மோடி பங்கேற்றதை விமர்சிப்பவர்களுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நேற்று முன்தினம் பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டார். இந்த வீடியோ வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சிதலைவர்களும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் இச்சம்பவத்தை விமர்சித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: மருத்துவர்களுக்காக 2 மணி நேரம் காத்திருந்த பிறகு மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படாததால் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சிமருத்துவர் கடந்த மாதம் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தியும், சில அதிகாரிகளை பணிநீக்கம்செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் கெடு விதித்த பிறகும், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் 34-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் களுக்கு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் அழைப்பு விடுத்தார். ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் உதவியுடன் அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார். சீதாராம் யெச்சூரி கடந்த 1952 ஆகஸ்ட் 12-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போது சென்னை) பிறந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவராக இருந்து, இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்எஃப்ஐ) உறுப்பினராக சேர்ந்தார். 1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1992-ல்அக்கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான பொலிட்பீரோவுக்கு தேர்வு செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார், ஆனால்...” - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: “மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய எதிரிகள் என்னுடைய நாற்காலியைத்தான் குறிவைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”எனக்கு முதல்வர் பதவி வேண்டாம். எங்கள் அரசாங்கம் நிறைய அவமானங்களை பார்த்து விட்டது. நடந்து வரும் போராட்டங்களில் அரசியல் சாயம் கலந்திருக்கிறது. நீதிவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய எதிரிகள் என்னுடைய நாற்காலியைத்தான் குறிவைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சு நடத்த வேண்டும்: நேரடி ஒளிபரப்பு செய்யுமாறு கொல்கத்தா மருத்துவர்கள் நிபந்தனை

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, கடந்த 33 நாட்களாக அந்த மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும், மாநில சுகாதாரத் துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந் திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆர்.ஜி. கர் மருத் துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். இதுதவிர மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பதவி நீக்கம் செய்யும்படி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Late...

செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம்: செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் ‘செமிகான் 2024’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான கொள்கை மற்றும் உத்திகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும், இத்துறை சார்ந்த கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் மோடி பேசிய தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்” - உ.பி முதல்வர் யோகி

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் இளவரசரான ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத குழுவின் தலைவராக மாறிக் கொண்டிருக்கிறார். தேசத்தின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை அழித்து, உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளுவதுதான் அவரது நோக்கமாக உள்ளது. இப்போது தேசத்திலிருந்து இடஒதுக்கீட்டை ரத்து செய்ய சதி செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பாக யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றம் கெடு: கொல்கத்தா மருத்துவர்கள் பணிக்கு திரும்ப மறுப்பு

கொல்கத்தா: பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்திவரும் கொல்கத்தா மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவை ஏற்க மறுத்துவிட்டனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு செப்.10-ம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி மீது வெறுப்பு இல்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: பிரதமர் மோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை. அவரது கருத்துகளைதான் எதிர்க்கிறேன் என்று அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்காவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற நேர்காணலில் ராகுல் காந்தி பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜகவில் யோகேஷ் பைராகி போட்டி

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியிலை பாஜக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. அங்குள்ள ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளரான வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் ஏர் இந்தியா விமானி கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், ஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மாநில முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர்களான கிருஷ்ண குமார் பேடி மற்றும் மணீஷ் குரோவர் முறையே நர்வானா மற்றும் ரோக்தக் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தகுந்த விஷயமாக, மாநிலத்தின் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வினேஷ் போகத்துக்கு எதிராக கேப்டன் யோகேஷ் பைராகியை பாஜக களமிறக்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்